இங்கிலாந்து அணியில் நட்சத்திர மட்டையாளர் அலைஸ்டர் குக் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் 147 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 7-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியை அடுத்து டெஸ்ட் தொடர்களில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக Alastair Cook முன்னதாக அறிவித்து இருந்தார்.


இந்நிலையில் இப்போட்டியின் 4-வது நாளான இன்று Alastair Cook தனது 147-வது ரன்னில் அறிமுக வீரர் விஹாரின் பந்தில் வெளியேறினார். எனினும் அவரது கடைசி போட்டி அவரக்கு நினைவு போட்டியாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.



ஏனெனில், இப்போட்டில் அவர் குறிப்பிடத்தக்கத சாதனை படைத்துள்ளார். அதாவது, இப்போட்டியில் 147 ரன்கள் குவித்துள்ள குக் தனது முதல் டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்தவர் (104* vs India in 2006) என்பது குறிப்பிடத்தகது. இந்த சதத்தின் மூலம் இவர், தனது ஆரம்பம் மற்றும் இறுதி போட்டியில் சதம் அடித்த வீரர்கள் என்னும் பட்டியலில் 5-வது வீரராக இடம்பெற்றுள்ளார்.


இதற்கு முன்னதாக இப்பட்டியலில் இடம்பிடித்தவர்கள் விவரம்...



முன்னதாக இப்போட்டியில் மேலும் ஒரு சாதனையினை பதிவு செய்தார் Alastair Cook. இப்போட்டியில் தனது 76-வது ரன்னை எடுத்தப்போது... அதிக ரன் குவித்த இடது கை மட்டையாளர் என்னும் பெருமையினையும் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக இலங்கை வீரர் சங்கரகாரா இந்த சாதனையினை தக்கவைத்திருந்தார்.