மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2022 பதிப்பின் சீசன்-ஓப்பனருக்கு சற்று முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அலெக்ஸ் ஹேல்ஸ், பயோ-பபிள் சோர்வைக் காரணம் காட்டி பத்து அணிகள் கலந்துக் கொள்ளும் ஐபில் போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளார். முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) ஜேசன் ராய், குமிழி சோர்வு காரணமாக, லீக்கின் வரவிருக்கும் சீசனில் இருந்து விலகினார்.


15-வது ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்ட 2 அணிகளுடன் 10 அணிகள், மே 29 ஆம் தேதி வரை போட்டிகளில் விளையாடும்.


முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பயோ பபிள் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | விராட் கோலிக்கு அவமரியாதை - பிசிசிஐ மீது கவாஸ்கர் அதிருப்தி


இந்த நிலையில், அலெக்ஸ் ஹேல்ஸ், பயோ-பபிள் கட்டுப்பாடுகளை காரணம் காட்டி ஐபில் போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளார். 


ஐபிஎல் 15 சீசனில் ஹேல்ஸ் பங்கேற்காததால், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் ஒயிட்-பால் கேப்டன் ஆரோன் ஃபின்ச் நியமிக்கப்பட்டார். பிப்ரவரி நடுப்பகுதியில் நடைபெற்ற ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில், ஃபின்ச் விலை போகவில்லை.


தற்போது KKR இல் இணைந்த ஃபின்ச் தனது 9வது ஐபிஎல் போட்டித்தொடரில் விளையாட உள்ளார். அவர் இரண்டு முறை வெற்றி பெற்ற கேகேஆர் அணியுடன் 15 மில்லியனுக்கு (INR 1.5 கோடி) இணைகிறார். இந்தத் தொகைக்குத்தான் கேகேஆர் அலெக்ஸ் ஹேல்ஸை மெகா ஏலத்தில் வாங்கியது.  


மேலும் படிக்க | லக்னோ அணியில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்!


ஃபின்ச்சின் ஐபிஎல் வாழ்க்கை ஒரு ரோலர்கோஸ்டர் சவாரி. அவர் இதுவரை பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் லயன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், புனே வாரியர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியர்கள் என பல அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.


T20 களில், ஆரோன் ஃபின்ச், 10,000க்கு மேல் ரன்களை குவித்திருக்கிறார். சராசரி ரன் ரேட் 30 க்கு மேல் மற்றும் 140 ஸ்டிரைக் ரேட்டுடன் இருக்கிறார்.


ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான KKR, இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில், நான்கு முறை சாம்பியன்கள் மற்றும் டிஃபென்டர்ஸ் MS தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஐ எதிர்த்து மார்ச் 26 அன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் விளையாடுகிறது.


முன்னதாக, ஐபிஎல் 2022 தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேசன் ராய் அறிவித்தார். ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து விலகிய அவர், பயோ பபிள் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  


மேலும் படிக்க | ஜேசன் ராய் விலகலுக்கான 2 முக்கிய காரணங்கள்


IPL 2022 க்கான KKR இன் முழுமையான அணி:


ஆண்ட்ரே ரசல், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர், ஷெல்டன் ஜாக்சன், அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், பாபா இந்திரஜித், அபிஜித் தோமர், சாம் பில்லிங்ஸ், ஆரோன் பிஞ்ச், ரசிக் தார், அசோக் ஷர்மா, டிம்மினா சவுதி , சிவம் மாவி, அனுகுல் ராய், சமிகா கருணாரத்னே, பிரதம் சிங், ரமேஷ் குமார், உமேஷ் யாதவ், எம்.டி நபி


மேலும் படிக்க | ஷ்ரேயாஸ் ஐயரால் கோலியின் இடத்திற்கு ஆபத்து?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR