IPL2022: ஜேசன் ராய் விலகலுக்கான 2 முக்கிய காரணங்கள்..!

பயோ பபிள் கட்டுப்பாடு காரணமாக ஐபிஎல் 2022 தொடரில் இருந்து விலகுவதாக ஜேசன் ராய் அறிவித்துள்ள நிலையில், அதற்கு வேறொரு காரணமும் கூறப்படுகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2022, 04:36 PM IST
  • ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்
  • அவர் விலகியதற்கு கூறப்படும் 2 காரணங்கள்
  • ஹர்திக் பாண்டியாவுக்கு தொடங்கிய தலைவலி
IPL2022: ஜேசன் ராய் விலகலுக்கான 2 முக்கிய காரணங்கள்..! title=

15-வது ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. மிகப் பிரமாண்டமாக நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்ட 2 அணிகளுடன் 10 அணிகள் களம் காண உள்ளன. மே 29 ஆம் தேதி வரை சுமார் 2 மாதங்கள் ஐபிஎல் திருவிழா களைகட்ட உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பயோ பபிள் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | விராட் கோலிக்கு அவமரியாதை - பிசிசிஐ மீது கவாஸ்கர் அதிருப்தி

இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய் அறிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த அவர், திடீரென இந்த முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பயோ பபிள் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். போதுமான நேரத்தை குடும்பத்துடன் செலவிட இருப்பதாகவும் ஜேசன் ராய் தெரிவித்துள்ளார்.

ஜேசன் ராய் விலகியதற்கான பின்னணியில் இரண்டு காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்று, ஐபிஎல் 2022 தொடரில் வீரர்களுக்கு இருக்கும் கடுமையான பயோ பபிள் விதிமுறைகளில் ஜேசன் ராய்க்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம் என என்று கூறப்படுகிறது. மற்றொன்று, ஃபார்மில் இருக்கும் அவர் வெறும் 2 கோடி ரூபாய்க்கு மட்டுமே குஜராத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்த தொகையில் அவருக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்ற காரணத்தை கூறி அவர் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. 

ஜேசன் ராய் விலகியது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. சுப்மான் கில் மற்றும் ஜேசன் ராயை ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறக்க குஜராத் திட்டமிட்டிருந்தது. இப்போது ஜேசன் ராய் விலகியிருப்பதால், அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேட வேண்டிய கட்டாயத்துக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஷ்ரேயாஸ் ஐயரால் கோலியின் இடத்திற்கு ஆபத்து?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News