20 ஓவர் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி அடுத்ததாக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை மொகாலியில் தொடங்குகிறது. இப்போட்டி விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்த சாதனையை எட்டவுள்ள 12வது இந்திய வீரர் என்ற பெருமையை விராட்கோலி பெற உள்ளார்.
மேலும் படிக்க | Costly Alimony: 300 கோடி ரூபாய் கொடுத்து விவாகரத்து செய்யும் கிரிக்கெட் பிரபலம்
இந்த டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதியில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐயின் இந்த முடிவு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி, 100வது டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் முன்னிலையில் விளையாட வேண்டும் என்பதை விரும்பியிருப்பார்.
ஆனால், துருதிஷ்டவசமாக அந்த வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருந்தாலும், விராட்கோலி மற்றும் அவரது ரசிகர்களுக்கு பிசிசிஐயின் முடிவு ஏமாற்றமாக அமைந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார். எனினும், விராட்கோலி இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை விளையாடுவார் என எதிர்பார்ப்பதாகவும் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பெங்களூருவில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022: சிஎஸ்கே விளையாடும் முதல் போட்டி இந்த அணியுடனா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR