Tokyo Olympics: கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஒலிம்பிக்கில் கொரோனா அதிகரிக்கிறது
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது, இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் 16 பேருக்கு புதிதாக COVID-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர், இருப்பினும், அவர்களில் யாரும் விளையாட்டு வீரர்கள் அல்ல என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
இந்த 16 பாதிப்புகளையும் சேர்த்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. நான்கு நாட்களில் முதல் முறையாக ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை.
இன்று பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 16 பேரில் யாரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவில்லை. 16 பேரில், நான்கு பேர் விளையாட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள், ஊடகங்களைச் சேர்ந்த இருவர், ஒன்பது பேர் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் ஒருவர் தன்னார்வலர் என்று தெரியவ்வந்துள்ளது.
Also Read | sex at Olympics: ஒலிம்பிக் போட்டிகளில் ஆணுறைகள் மற்றும் செக்ஸ் விழிப்புணர்வு
விளையாட்டுக்களை கொரோனா மட்டும் பாதிக்கவில்லை. புதன்கிழமையன்று ஜப்பானில் வெப்பமண்டல புயலும் பாதிப்பை ஏற்படுத்தியது. சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
ஜப்பானின் உள்ளூர் நேரம் (2100 GMT) காலை 6 மணிக்கு முன்னதாக வடக்கில் ஜப்பானின் மியாகி பகுதியில் புயல் கரை கடந்தது. இவாட் மாகாணத்தில் உள்ள மோரியோகா நகரின் தெற்கே புயல் சென்று கொண்டிருக்கிறது, இது ஒரு மணி நேரத்திற்கு 90 கிலோமீட்டர் (56 மைல்) வேகத்தில் "வலுவானதாக" காற்றைக் கொண்டுவருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மியாகியில் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகள் புதன்கிழமை நடைபெறுகின்றன. புயலால் கால்பந்து போட்டிக்கள் பாதிக்கப்படாது என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Also Read | Olympic Games: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நகரங்கள் புகைப்படத் தொகுப்பு
முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் ஒரு விளையாட்டு வீரருக்கு முதல் COVID தொற்றுநோயை உறுதிசெய்தனர், டச்சு வீரர் ஃபின் ஃப்ளோரிஜ் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற போட்டிகளில் கலந்துக் கொண்ட பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
செக் குடியரசு, அமெரிக்கா, சிலி, தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து நாட்டு வீரர்கள் டோக்கியோ விமானநிலையத்தில் தரையிறங்கிய பின்னர் செய்யப்பட்ட சோதனைகளில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கடற்கரை கைப்பந்து மற்றும் சாலை சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் கலந்துக்கொள்ளவிருந்த நான்கு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பாஸிடிவ் என தெரியவந்தது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வெளியில் உலாவுவதற்கு தடை, முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் என பல வழிகாட்டு நெறிமுறைகளும் கட்டாயமாக பின்பற்றப்படுகின்றன. இருப்பினும், விளையாட்டு வீரர்கள், பதக்கம் பெறும்போது, மேடையில் 30 விநாடிகளுக்கு தங்கள் முகக்கவசங்களை அகற்றலாம். அது புகைப்படங்கள் எடுப்பதற்காக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | மகளிர் குத்துச் சண்டை போட்டியில் லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR