வேகத்தில் மிரட்டும் ஆண்டர்சன்! அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்த இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பியுள்ளனர்.
India vs England இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பியுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்றைய நாள் இங்கிலாந்தில் மழை மேகங்கள் இன்றி சிறிது வெயில் காணப்பட்டது. இதனால் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார் என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் எந்த மாற்றங்களும் இல்லாமல் மூன்றாவது போட்டியில் ஆடி வருகின்றனர். இங்கிலாந்து பொறுத்தவரை இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளார் ஜோ ரூட். லீட்ஸ் மைதானத்தில் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்களை அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியுள்ளனர். கே எல் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். புஜாரா இன்றைய போட்டியிலும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஒரு ரன்களில் வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்படும் விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆண்டர்சன் தனது சிவிங் பந்துகளால் மிரட்டி வருகிறார்.
ALSO READ WTC: 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது இந்திய அணி!
இந்திய அணி 12 ஓவர் முடிவில் 26 ஆண்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோஹித் சர்மா 9 ரன்களுடனும், ரகானே ரன் ஏதுமின்றி களத்தில் உள்ளனர். 6 ஓவர்கள் வீசிய ஆண்டர்சன் 3 மெய்டன்களுடன் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR