கும்பிளேவின் ஒரு மணி நேர சவால்: விராட் கோலி அதிர்ச்சி தோல்வி!!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அண்மையில் அனில் கும்பிளே நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து வீரர்களின் தரத்தை உயர்த்த பல்வேறு புதுமையான யுக்திகளை கையாண்டு வருகிறார் அனில் கும்பிளே.
இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள அலூர் என்ற இடத்திற்கு வீரர்கள் அனைவரையும் அழைத்துச்சென்ற பயிற்சியாளர் கும்பிளே, ஒரு புதுமையான சவாலை வீரர்களுக்கு வைத்தார். அதாவது பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒரு மணி நேரம் ஆட்டமிழக்காமல் பேட் செய்ய வேண்டும். அதேவேளையில் பந்து வீச்சாளர்கள் அதிகபட்சமாக பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச்செய்ய வேண்டும்.
இந்த பரிசோதனையில், அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் விராட் கோலி தோல்வி அடைந்தார். ஒரு மணி நேரத்தில் இருமுறை விராட் கோலி ஆட்டமிழந்தார். இரண்டு தடைவையும் ஜடேஜா பந்திலேதான் விராட் கோலி அவுட் ஆனார். தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோரும் இந்த சவாலில் தோல்வியுற்றனர். ஒரு மணி நேர இந்த சோதனையில் வெற்ற பெற்ற ஒரே வீரர் ரகானே மட்டும்தான்.
கடந்த 6 மாதங்களாக தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடியது தான் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் என்று தெரிகிறது.