Matheesha Pathirana: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெத்-பவுலிங் ஸ்பெஷலிஸ்ட் மதீஷா பத்திரனா தொடை தசையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வர தனது சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளார். மேலும் இந்த ஆண்டு மீதமுள்ள ஐபிஎல் 2024 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. சென்னை நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் பத்திரனா விளையாடவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியின் போது காயம் சரியாகாததால் பத்திரனா வெளியேறினார். ஏற்கனவே தீபக் சாஹர் இல்லாமல் தடுமாறிய சென்னை அணிக்கு தற்போது மேலும் ஒரு இழப்பு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?


கடந்த புதன்கிழமை நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு பந்துகளை மட்டுமே வீசிய தீபக் சாஹர் காயம் காரணமாக வெளியேறினார். மேலும் தர்மசாலாவிற்கு அணியுடன் செல்லவில்லை. ஐபிஎல் 2024ல் சிஎஸ்கே அணிக்காக பத்திரனா வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி 7.68 பொருளாதாரத்துடன் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். கடந்த மார்ச் மாதம் சில்ஹெட்டில் பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை அணிக்காக விளையாடியபோது தொடையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடக்க ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. 


இலங்கையின் முக்கியமான லெக்ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கவும் தனது இடது காலில் ஏற்பட்ட தீராத வலி காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளார். அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான தற்காலிக அணியை கூட இலங்கை இன்னும் வெளியிடவில்லை. பத்திரனா காயத்துடன் ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய நிலையில், சிஎஸ்கே அணியில் உள்ள ஒரே ஒரு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளராக இங்கிலாந்தின் ரிச்சர்ட் க்ளீசன் உள்ளார். பங்களாதேஷை சேர்ந்த முஸ்தாபிசுர் ரஹ்மான் மே 1ம் தேதியுடன் தனது நாட்டிற்கு திரும்பி உள்ளார்.


ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க பங்களாதேஷ் அணியுடன் இணைந்துள்ளார். மேலும், சேப்பாக்கத்தில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த துஷார் தேஷ்பாண்டே, தர்மசாலாவில் நடந்த போட்டியில் சிஎஸ்கேயின் முக்கிய வீரராக இருந்தார். தற்போது சென்னை அணியில் இருந்து முஸ்தாபிசுர் ரஹ்மான், பத்திரனா, தீபக் சாஹர் வெளியேறியுள்ள நிலையில் சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி போன்ற இளம் வீரர்களை நம்பி சென்னை அணி மீதலுள்ள போட்டியில் விளையாட உள்ளது. 


சென்னை அணியில் இருந்து வெளியேறியுள்ள பத்திரனா உருக்கமான பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "2024 ஐபிஎல் சாம்பியன் கோப்பையில் விரைவில் சிஎஸ்கே அணியுடன் இருக்க வேண்டும் என்ற எனது ஒரே ஆசையுடன் விடைபெறுகிறேன்! சென்னையின் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் அன்புக்கும் சிஎஸ்கே அணிக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார். 



மேலும் படிக்க |  ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ