சென்னை அணிக்கு இன்று பாராட்டு விழா- மாஸாக வந்த தோனி
ஐ.பி.எல் போட்டியில் கோப்பையை வென்றதற்காக சென்னையில் இன்று நடைபெறும் பாராட்டுவிழாவில் பங்கேற்க ’தல’ தோனி தனிவிமானம் மூலம் சென்னை வந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 4வது முறையாக கோப்பையை வென்றதற்காக மிகப் பிரம்மாண்டமாக வெற்றி விழா நடத்தப்படும் என அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்தது.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் ஐ.பி.எல் (Indian Premier League) கோப்பையை வெற்றிப் பெற்ற சென்னை அணிக்கான பாராட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
ALSO READ | நான் தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை - ஹர்திக் பாண்டியா!
இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (Chennai Super Kings) கேப்டன் தல தோனி (MS Dhoni), சொந்த ஊரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அவர், சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். கிண்டியில் இருக்கும் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தல தோனி, மாலையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, சென்னை அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய அவருக்கு சிறப்பு கௌரவமும் அளிக்கப்படுகிறது.
இதேபோல், சென்னையில் உள்ள நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். ஐ.பி.எல் தொடங்கப்பட்டதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி கேப்டனாக இருந்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு முதன்முறையாக சென்னை அணி ஐ.பி.எல் போட்டியில் வாகை சூடியது. 2011 ஆம் ஆண்டும், 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
பின்னர் சூதாட்ட புகாரில் சிக்கி 2 ஆண்டுகள் தடைசெய்யப்பட்ட பிறகு 2018 ஆம் மீண்டும் ஐ.பி.எல்லில் களமிறங்கிய சென்னை அணி, அந்த ஆண்டே கோப்பையைக் கைப்பற்றி அனைவரையும் வியக்க வைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாலும், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் 4வது முறையாக கோப்பையை தன்வசப்படுத்தியது. தோனியின் கேப்டன்சியில் கீழ் பெற்ற 4வது கோப்பையை சென்னை அணி நிர்வாகம் என்று சிறப்பாக கொண்டாடுகிறது.
ALSO READ | மீண்டும் ஃபார்முக்கு வந்த ஹர்திக் பாண்டியா, கதிகலங்கும் நியூசிலாந்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR