நான் தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை - ஹர்திக் பாண்டியா!

நான் தோனியாக மிகச் சிறந்தவராக பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை. என்னைப் பொறுத்தவரை தோனி என் சகோதரர் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 18, 2021, 05:30 PM IST
நான் தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை - ஹர்திக் பாண்டியா! title=

ஐபிஎல் 2021 முடிவடைந்து தற்போது உலக கோப்பை போட்டிகள் தொடங்கி உள்ளன.  கடந்த முறை கோப்பையை வென்ற மும்மை அணி, இந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.  மும்மை அணி வீரரும், இந்திய அணியின் ஆல்ரவுண்டருமான ஹர்த்திக் பாண்டியா சமீபத்திய நேர்காணலில் தோனி என்னுடைய சகோதரர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

தோனி ஆரம்பத்தில் இருந்தே என்னைப் புரிந்து கொண்டவர். நான் எப்படி செயல்படுகிறேன், நான் எப்படிப்பட்ட நபர், எனக்குப் பிடிக்காத விஷயங்கள், எல்லாம் அவருக்கு தெரியும். 2019ம் ஆண்டு  நியூசிலாந்து தொடருக்காக நான் தேர்வு செய்யப்பட்டபோது ஆரம்பத்தில் எனக்கு ஹோட்டல் அறைகள் இல்லை.   அப்போது தோனியிடம் இருந்து அழைப்பு வந்தது.  நான் தரையில் தூங்கி கொள்வேன், நீங்கள் பெட்டில் தூங்குங்கள் என்று கூறினார்.  எனக்காக எப்போதும் முதல் ஆளாக துணை நிற்பவர் தோனி மட்டுமே.  எனது ஆட்டங்களை மிகவும் ஆழமாக அறிவார் தோனி. நான் அவருக்கு மிகவும் நெருக்கமானவன். கடினமான சூழ்நிலையில் ​​எனக்கு ஆதரவு அளித்துவரும் அவரே.  கடந்த ஆண்டு தோனியின் பிறந்தநாளுக்கு அவரை பார்க்க சென்றிருந்தேன்.  எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, முழங்கால் வலியுடன் இருக்கிறேன் என்கிறார்.  ஏன் என்று கேட்டதற்கு 50 பைக்குகளை ரிப்பேர் செய்தான் என்று கூறினார்.

ALSO READ பங்களாதேசை பந்தாடிய ஸ்காட்லாந்து அணி! 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

தோனி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவருக்கும் அதே போல் தான்.  நான் அவரை எம்எஸ் தோனியாக பார்க்காதது தான் அவருக்கு என்னை பிடித்திருக்கலாம். பல வழிகளில் அவர் ஒரு வாழ்க்கை பயிற்சியாளரும் கூட.  அவருடன் பழகினாலே நீங்கள் Maturity-யை கற்றுக் கொள்வீர்கள், பொறுமையாக இருப்பது எப்படி என்றும் தெரிந்து கொள்வீர்கள்.  அவரை பார்த்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் ஒருபோதும் தனது அமைதியை இழக்க மாட்டார். 

dhoni

மிஸ்டர் கூல் - எனக்கு இந்த வார்த்தை பிடிக்கவில்லை, மக்கள் அவரை மிஸ்டர் கூல் என்று அழைப்பது அவருக்குப் பொருந்தாது. என்னைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் நிலையானவர். அவர் வெளியே செல்லும் போது, ​​மக்கள் எப்போதும் புகைப்படங்கள் மற்றும் அவருடன் பேச அருகில் செல்கிறார்கள். அவர் வெளியில் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை போலவே நானும் தற்போது நடந்து கொள்கிறேன்.  நான் இப்போது வெளியே செல்லும் போது, ​​எத்தனை பேர் இருந்தாலும், என் முகத்தில் எப்போதும் ஒரு பெரிய புன்னகை இருக்கும் என்று தோனியை பற்றி ஹர்திக் பாண்டியா கூறி இருந்தார்.

ALSO READ தளபதி மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ஒன் அண்ட் ஒன்லி ‘தல’ தோனி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News