பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் அபூர்வி சண்டீலா - தீபக் குமார் இணை, சீனாவின் Quian Yang - Yu Hoanan ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதேபிரிவில் இந்தியாவின் மற்றொரு ஜோடியான அன்ஜும் மவுட்கில் - திவ்யான்ஷ் சிங் பன்வார் இணை, ஹங்கேரியின் Eszter Meszaros - Peter Sidi, ஜோடியை வீழ்த்தி  வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடைப்பெற்றது. இதன் 10 மீ., "ஏர் ரைபிள்" பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அபுர்வி சண்டேலா (210.8 புள்ளி), தீபக் குமார் (208.3 புள்ளி) ஜோடி 419.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதி சுற்றுக்கு நுழைந்தது. மற்றொரு இந்திய ஜோடி அஞ்சும் (208.9 புள்ளி), திவ்யான்ஷ் சிங் பன்வார் (209.1 புள்ளி) ஜோடி 418.0 புள்ளிகளுடன் நான்காவது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றது.



இறுதி சுற்றில் இந்தியாவின் அபுர்வி, தீபக் ஜோடி 16-6 என்ற கணக்கில் சீனாவின் Quian Yang - Yu Hoanan ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் அஞ்சும், திவ்யான்ஷ் சிங் ஜோடி 16-10 என்ற கணக்கில் ஹங்கேரியின் Eszter Meszaros - Peter Sidi ஜோடியை வீழ்த்தியது.


இதன்மூலம் இத்தொடரில் இந்தியாவுக்கு 4 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்துள்ளது.