ஐபிஎல் 2022 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் புதிய அணிகளாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கான இடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டிப் போடுகின்றன. இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே-வின் மோசமான சாதனை


அதேநேரத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் முழுமையாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும்.  இதனால் இன்றைய ஐபிஎல் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற இருக்கிறது. மே 24 ஆம் தேதி முதல் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற இருக்கிறது. அன்றைய போட்டியில் குஜராத் அணியுடன் ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிளில் 2ஆம் இடம் பிடிக்கும் அணி மோதும். இரண்டாவது பிளே ஆஃப் மே 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதிப்போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறுகிறது. 



இறுதிப்போட்டிக்கு முன்னதாக மிகப் பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகளை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.  போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 40 நிமிடங்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்ற உள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் மைதானத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு புதியதாக களமிறங்கும் அணிகளில் ஏதேனும் ஒன்று செல்லும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 


மேலும் படிக்க | விராட் கோலியின் விரக்தி - மைக் ஹெசன் விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR