டி20 உலகக்கோப்பை அணியில் இந்த வீரருக்கு வாய்ப்பில்லை - ஆரூடம் கூறிய முன்னாள் பந்துவீச்சாளர்
டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு இருக்காது என முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷமி, சென்ற வருடம் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசியாக களமிறங்கினார். அதன்பின்னர் டி20 போட்டிக்கான இந்திய அணியில் அவர் தொடர்ந்து இடம்பெறாமல் இருக்கிறார்.
அதேசமயம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முகம்மது ஷமி இந்தியாவுக்காக விளையாட உள்ளார். ஆனால் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவாரா என்று அவரது ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முகம்மது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “இப்போதைக்கு முகம்மது ஷமி டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றறேதெரிகிறது. ஆனால் அவரது திறமைகள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும்.
மேலும் படிக்க | கம்பீரை பேட்டால் வெளுத்த தினேஷ் கார்த்திக்... ஆதரவு கொடுத்த சுனில் கவாஸ்கர்
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடாவிட்டாலும், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவரை தேர்வுசெய்ய தேர்வுக்குழு நிச்சயமாக பரிசீலிக்கும் என்றே கருதுகிறேன்.
இந்த ஆண்டில் இந்திய அணிக்கு அதிகமான ஒருநாள் போட்டிகள் இல்லை. அதனால் ஐபிஎல் முடிந்தவுடன் ஷமி ஓய்வில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் முகம்மது ஷமி இடம்பெற வாய்ப்பிருக்கிறது” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR