அஸ்வினுக்கு அடித்தது ’லாட்டரி’..! முன்னாள் வீரரின் ரியாக்ஷ்ன்..!
அஸ்வின் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியிருப்பது, அவருக்கு அடித்துள்ள ‘லாட்டரி’ என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரீதிந்தர்சிங் சோதி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக இருந்த அஸ்வின், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், அவரையும் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ரீதிந்தர்சிங் சோதி, அஸ்வின் அதிர்ஷ்டசாலி எனக் கூறியுள்ளார்.
ALSO READ | டிகாக் முதல் டுபிளெசிஸ் வரை: 2021ல் ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்கள்!
இப்போது அவருக்கு அடித்திருப்பது லாட்டரி எனக் கூறியுள்ள அவர், கிட்டத்தட்ட அவருடைய கிரிக்கெட் பயணம் முடிவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாக கூறியுள்ளார். ஏனென்றால், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெறவில்லை. இதனால், கிட்டத்தட்ட ஓரம்கட்டப்பட்ட நிலையிலேயே இருந்த அஸ்வின், இந்திய அணிக்கு திரும்பியிருப்பது அவருக்கு அடித்துள அதிர்ஷடம் என சோதி குறிப்பிட்டுள்ளார். மிகச்சிறந்த திறமையும், அனுபவமும் இருப்பதால், இந்திய அணிக்கு அவரால் மீண்டும் திரும்ப முடிந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
ALSO READ | ALSO READ | தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!
இந்திய அணிக்காக அஸ்வின் கடைசியாக 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய பிறகு, அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனைக் குறிப்பிட்ட சோதி, சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழு சரியான முடிவை எடுத்திருப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். தேர்வுக்குழு மற்றும் டிராவிட், அணி நிர்வாகத்தினர் அஸ்வின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதன் காரணமாகவே அவருக்கு அணியில் இடம் கிடைத்திருக்கிறது என்றும் கூறினார்.
தன்னை இன்னொருமுறை அஸ்வின் நிரூப்பிப்பார் என்றும் சோதி நம்பிக்கை தெரிவித்தார். ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, அஸ்வின் 111 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR