இந்திய அணி வெற்றி பெற 163 ரன்கள் தேவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



பாகிஸ்தான் அணி 162 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 47 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் கேதர் ஜாதவ் தலா மூன்று விக்கெட்டும், ஜாஸ்ரிட் பும்ரா இரண்டு விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.


 




பாகிஸ்தான் வீரர் ஹாசன் அலி* அவுட்; இவர் 3 பந்துகளில் 1 ரன் எடுத்து அவுட் ஆனார். தற்போது பாகிஸ்தான் அணி 42.2 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.


 




பாகிஸ்தான் வீரர் பாகீஷ் அஷ்ரஃப் அவுட்; இவர் 44 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது பாகிஸ்தான் அணி 41.1 ஓவர் முடிவில் எட்டு 


விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. 


முகம்மது அமீர்* 4(3)


ஹாசன் அலி* 0(0)


 




பாகிஸ்தான் வீரர் ஷாதாத் கான் அவுட்; இவர் 19 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது பாகிஸ்தான் அணி 34 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. 


பாகீஷ் அஷ்ரஃப்* 10(15); முகம்மது அமீர்* 4(3)


 




பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி அவுட்; இவர் 10 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது பாகிஸ்தான் அணி 29 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. 


ஷாதாத் கான்* 2(2)


பாகீஷ் அஷ்ரஃப்* 0(5)


 



 



பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் அவுட்; இவர் 67 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது பாகிஸ்தான் அணி 27 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. 


ஆசிப் அலி* 1(5)


ஷாதாத் கான்* 0(1)


 



 



பாகிஸ்தான் வீரர் சர்ஃப்ராஸ் அகமது அவுட்; இவர் 12 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது பாகிஸ்தான் அணி 25 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. 


சோயிப் மாலிக் * 40(59)


ஆசிப் அலி* 0(1)


 



 



பாகிஸ்தானின் வீரர் பாபர் ஆசாம் அவுட்; இவர் 62 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது பாகிஸ்தான் அணி 22 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. 


சோயிப் மாலிக் * 35(53)


சர்ஃப்ராஸ் அகமது * 1(1)


 



 



தற்போது பாகிஸ்தான் அணி 16 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து ஆடு வருகிறது. 


சோயிப் மாலிக் * 26(36)


பாபர் ஆசாம்* 32(44)



பாகிஸ்தானின் மற்றொரு தொடக்க வீரர் பகர் ஜமான் அவுட்; இவர் ஒன்பது பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார். தற்போது பாகிஸ்தான் அணி ஐந்து ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது. 


இந்த விக்கெட்டையும் புவனேஷ் குமார் கைப்பற்றினார். இவர் இரண்டு விக்கெட் எடுத்துள்ளார்.



பாகிஸ்தானின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் அவுட் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்த விக்கெட்டை புவனேஷ் குமார் எடுத்தார்.


 




இந்தியா, பாகிஸ்தான் போட்டி ஆரம்பம். களத்தில் இருநாட்டு வீரர்களும் வந்துள்ளனர்.



இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. 


 



 



 



 



துபாயில் நடைபெற்று வரும் ஆசியா கோப்பை தொடரின் 5வது போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் "பி" பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுகின்றன. இந்த போட்டி துபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில், இன்று மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. 


ஆசியா தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் ஹாங்காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேபோல பாகிஸ்தானும் இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளது. முதல் போட்டியில் ஹாங்காங் அணியை வென்றது.


ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், இரண்டாவது போட்டோயில் இந்தியாவிடமும் தோல்வி அடைந்ததால், ஆசியா கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. 


இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைபற்றியது பாகிஸ்தான் அணி. அதன பிறகு இரு அணிகளும் ஆசியா தொடரில் மோத உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகளிடையே எழுந்துள்ளது.


இன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமேயில்லை. இந்தியா, பாகிஸ்தான் மோதுகிறது என்றாலே உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.