ஆசிய கோப்பையில் இந்திய அணியை அச்சுறுத்தும் அணிகள்
ஆசிய கோப்பை 2022: நாளை முதல் ஆசியக் கோப்பை போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்த அணிகளால் இந்திய அணிகளுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.
ஆசிய கோப்பை: 2022 ஆசிய கோப்பை டி20 ஃபார்மேட்டில் நடைபெறுவதால் ரசிகர்கள் போட்டியை காண உற்சாகமாக இருக்கின்றனர். 38 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய கோப்பை தொடரில் இந்த முறை 6 அணிகள் மோதுகின்றன. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை துபாய் மற்றும் ஷார்ஜாவில் இந்த போட்டிகள்நடைபெற இருக்கின்றன.
மீண்டும் ஆசியக்கோப்பை
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஆசிய கோப்பை 2018-ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இதன் பின்னர் 2020 முதல் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடி காரணமாக ஆசிய கோப்பை இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில், 20 ஓவர் ஃபார்மேட்டில் இந்த முறை ஆசியக்கோப்பை தொடர் நடைபெறுகிறது.
வாசிம் அக்ரம் கணிப்பு
பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஆசியக்கோப்பை போட்டி குறித்து பேசும்போது, "இதுவே சிறந்த ஆசிய கோப்பையாக இருக்கும். முன்பு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை என்று இருந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அனைத்து அணிகளும் ஆபத்தானவையாக மாறியிருக்கின்றன. ஆசியாவில் உள்ள அனைத்து அணிகளுக்கும் இந்தப் போட்டி மிகவும் முக்கியமானது. இது உலகக் கோப்பைக்கு முந்தைய பயிற்சி. நீங்கள் வெற்றி பெற்றால், உலகக்கோப்பைக்கு உற்சாகத்துடன் செல்ல உதவியாக இருக்கும். நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை ஆசியக்கோப்பையை வெற்றி பெற்றிருந்தாலும், இந்த முறை அந்த அணிக்கு சவால் காத்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதல்
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தது. அதன் பிறகு இரு அணிகளும் நாளை துபாயில் நடைபெறும் போட்டியில் நேருக்கு நேர் மோத இருக்கின்றன. இதுகுறித்து அக்ரம் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி முன்னேறி வருகிறது. அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான வெற்றி, நாளுக்கு நாள் இந்தியாவுக்கு எதிராக போட்டியிட முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளித்தது என்று நினைக்கிறேன். நிச்சயம் இந்திய அணிக்கு பாகிஸ்தான் சவாலாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Ind Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற 4 மோதல்கள்
மேலும் படிக்க | AsiaCup2022: ரோகித் சர்மா விரும்பாத அந்த பிளேயர் இந்திய அணியில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ