ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே ஆகஸ்ட் 28 ஆம் தேதி நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. கிரிக்கெட் உலகில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இரு அணிகளும், கடைசியாக 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் நேருக்கு நேர் சந்தித்தன. 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் ஒருமுறை கூட இந்திய அணியிடம் வெற்றிபெறாத பாகிஸ்தான் அணி, கடந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் முதன்முறையாக இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கங்குலியிடம் எனக்காக பேசியவர் இவர் - சேவாக் ஓபன் டாக்


அதன்பிறகு இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை. எதிர்வரும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சந்திக்க இருக்கின்றன. இப்போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், ஆசியக்கோப்பை தொடர் குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தெரியவந்திருக்கிறது. 1984 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே ஒரே ஒருமுறைகூட நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை. இந்தியா - இலங்கை, இலங்கை - பாகிஸ்தான், பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மட்டுமே இறுதிப் போட்டியில் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. 


பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒருமுறைகூட ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளாதது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறையாவது இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கியிருக்கும் இந்தியப் படை, அசுர பலத்துடன் காணப்பட்டாலும், பாகிஸ்தான் அணியும் வலுவான அணியை களமிறக்கியுள்ளது. இலங்கை அணியையும் குறைத்து மதிப்பிடமுடியாது என்பதால், இந்த ஆசியக்கோப்பை தொடரை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். 


மேலும் படிக்க | கிரிக்கெட் இனி மெல்ல சாகும் - கபில் தேவ் எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ