ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றுக்கள் தற்போது நடந்துவரும் சூழலில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி முதலில் ஆடிய வங்கதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. அந்த அணி வீரர் ஆசிப் உசைன் அதிகபட்சமாக 39 ரன்கள் விளாசினார். மெகிடி ஹசன் 38 ரன்கள், மஹ்முதுல்லா 27, சாகிப் அல் ஹசன் மற்றும் மொசாடெக் தலா 24 ரன்கள் அடித்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 


 



இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். நிசாங்கா 20 ரன்கள் அடித்தார். கேப்டன் தசுன் ஷனகா 45 ரன்கள் குவித்தார்.



கருணாரத்னே 10 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார். இலங்கை அணி 19.2 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.


மேலும் படிக்க | இனி உலக கோப்பை போட்டிகள் Hotstar-ல் ஒளிபரப்பு இல்லை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ