Cricket News: சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (Sydney Cricket Ground) நடைபெற்று வரும் இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 133 ரன்கள் எடுத்துள்ளது. அதேநேரத்தில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் நான்கு விக்கெட் மட்டும் ஆஸ்திரேலிய அணியிடம் உள்ளது. அதேபோல இந்திய அணியை விட  2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா (Australia vs India) இடையேயான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (எஸ்சிஜி) ஆரம்பமானது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜஸ்பிரீத் பும்ரா (Jasprit Bumrah) மற்றும் ஆர் அஸ்வின் ஆகியோர் இணைந்து ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை திக்குமுக்காட வைத்தனர். தன் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய மொஹம்மத் சிராஜும் (Mohammed Siraj) மிகச் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.


 



இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 195 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்களை எடுத்தது. அடுத்த நாள் தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் கேப்டன் ரஹானேவின் (Ajinkya Rahane) 112 ரன்கள், ஜடேஜா 57 ரன்களுடன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 326 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவை விட 131 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றது.


ALSO READ |  Cricket: விராட் கோலியிடம் அஜிங்க்யா ரஹானே மன்னிப்பு கேட்பது ஏன்?


தற்போது இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் ஆஸ்திரேலியா அணி இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியை விட இரண்டு ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி சார்பில் ஜடேஜா (Ravindra Jadeja) 2 விக்கெட்டும், ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார்கள்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR