ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்டில் இந்திய கேப்டன் ரன் அவுட் ஆக வழிவகுத்த மிகப் பெரிய தவறுக்காக, தான் விராட் கோலியிடம் மன்னிப்பு கோரியதாக இந்திய அணியின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்தார்.
அடிலைட் மைதானத்தில் இந்திய அணி பேட்டிங் செய்துக் கொண்டிருந்தபோது அஜிங்கிய ரஹானே (Ajinkya Rahane) செய்த தவறால் கோலி (Virat Kohli) ரன் அவுட் ஆனார். நான்காவது வரிசையில் களமிறங்கிய கோலி, 2020ஆம் ஆண்டின் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்யும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தார். 74 ரன்கள் எடுத்திருந்தபோது, பேட்டிங் செய்து கொண்டிருந்த ரஹானே ரன் எடுக்கலாம் என்று அழைப்பு விடுத்தார்.
அதனை நம்பி நடு மைதானம் வரை கோலி ஓடிய நிலையில், ரன் அவுட் ஆனார். இது ஆட்டத்தில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்போது, விராட் கோலி தனது 28 வது சதத்தை எடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் விளையாடிக் கொண்டிருந்தார். கோலியைத் தொடர்ந்து ரஹானேவும் (Ajinkya Rahane) 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இது இந்திய அணிக்கு (Team India) மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
Also Read | IPL 2022 Edition: இனி ஐ.பி.எல் போட்டியில் 10 அணிகள் விளையாடும் BCCI ஒப்புதல்
மைதானத்தில் கோஹ்லியும், ரஹானேயும் பேட்டிங் (Batting) செய்துக் கொண்டிருந்தபோது, ஒரு ரன் எடுக்க அழைப்பு விடுத்தார் ரஹானே. கோலி ஓடத் தொடங்கிவிட்டா. ஆனால் பீல்டர் பந்தை விரைவாக பெற்றுவிடுவார் என்பதை தாமதாக உணர்ந்த ரஹானே பின் பின்வாங்கினார், ஆனால் கோஹ்லி ஏற்கனவே பிட்சின் நடுவே வந்துவிட்டதால், அவரால் திரும்பிப் போகமுடியவில்லை, நேரம் கடந்துவிட்டது. மிகவும் தாமதமாகிவிட்டது.
"அன்றைய ஆட்டத்தின் முடிவில் நான் கோஹ்லியிடம் சென்று மன்னிப்புக் கேட்டேன். விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லி அவரும் அதை புரிந்துக் கொண்டார்" என்று மெல்போர்னில் இரண்டாவது டெஸ்ட் (Test Cricket) போட்டியில் கலந்துக் கொள்வதற்கு முன்னதாக ரஹானே கூறினார்.
"நாங்கள் இருந்த நிலைமையில் பேட்டிங் சரியாக போய்க் கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று நிலைமை மாறிவிட்டது. இதுபோன்ற விஷயங்கள் கிரிக்கெட்டில் நடப்பது சகஜம்தான். நாம் அதை உணந்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும்" என்று ரஹானே கூறினார்.
Also Read | நடராஜனுக்கு Paternity Leave கொடுக்காதது ஏன்? சாடுகிறார் கவாஸ்கர்
அந்த சமயத்தில் விராட் கோலி ரன்-அவுட் ஆனது ஆஸ்திரேலியாவுக்கு (Australia) ஆதரவாக போட்டியை மாற்றியது என்பதையும் ரஹானே ஒப்புக்கொண்டார். இந்த சம்பவத்திற்கு முன்னர் முதல் இன்னிங்சில் இந்தியா 188/3 என்ற நிலையில் இருந்தது, ஆனால் கோலியின் ரன் அவுட்டுக்கு பிறகு 244 ரன்களில் இந்திய அணி சுருண்டது.
"இது மிகவும் கடினமான சமயம், நாங்கள் அந்த தருணத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்தோம் என்பது வெளிப்படையானது. எங்கள் பார்ட்னர்ஷிப்பும் நன்றாக இருந்தது, ஆனால் என்னுடைய தவரால் நடந்த ரன் அவுட்டால் நிலைமை மாறிவிட்டது." என்று ரஹானே (Ajinkya Rahane) கூறினார்.
இருப்பினும், கோலியின் ரன் அவுட்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க இந்தியா தவறிவிட்டது. வலுவான ஆஸ்திரேலிய பந்துவீச்சு தாக்குதலுக்கு முன்னால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.
Also Read | Maradona-வின் இரண்டாவது autopsy report: மகளின் மறைமுக ட்வீட் சொல்வது என்ன?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
zeenews.india.com/tamil/topics/