கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியை இந்தியா வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் பெற்ற ஆறுதல் வெற்றியுடன் இந்தியா ஒரு நாள் போட்டித்தொடரை முடிந்தது. இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற விகிதத்தில் கைப்பற்றியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிட்னியில் நடைபெற்ற இரண்டு தொடக்க இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 2-0 என்ற நிலையில்  வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்திய அணி, இன்றையப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தில்  இருந்தது. இந்த தொடரை முழுமையாக கைப்பற்றிவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் ஆஸ்திரேலியா செயல்பட்டது. 


கான்பெர்ராவில் புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வெற்றிக் கொண்டது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது. 


தொடர்ந்து மட்டை வீச களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியை 289 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா. இதற்கு இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் உதவினார்கள். 



அதேபோல், ஆஸ்திரேலிய அணியின் க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) மற்றும் அலெக்ஸ் கேரி (Alex Carey)  இணைந்து தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. 38 வது ஓவரில் அலெக்ஸ் கேரி (Alex Carey)  ரன் அவுட் (run out) இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை அளித்தது.


தமிழக வீரர் நடராஜன் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றினார். தனது முதல் சர்வதேச போட்டியிலேயே முக்கியமான  இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார் நடராஜன். 


நடராஜனுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



நடராஜன் சர்வதேச மைதானத்தில் களத்தில் பந்து வீச இறங்குவதற்கு முன்பே, ஹர்திக் பாண்ட்யா உட்பட கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவர் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்திருந்தனர். 
அதிலும் குறிப்பாக, முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறாத நிலையில், நடராஜன் (Natarajan) பங்கு கொண்ட முதல் சர்வதேச போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு அவர் எடுத்த இரண்டு முக்கிய விக்கெட்டுகளும் பங்களித்துள்ள நிலையில் நடராஜன் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.  


தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜனின் அருமையான ஆட்டத்திற்கும் அணிக்கான அவரது பங்களிப்புக்காக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாசு அவர்களும் டிவிட்டர் செய்தியில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.



தற்போது ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியா செல்வது சந்தேகமாக இருக்கும் நிலையில், தமிழக வீரர் நடராஜனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பையும் நடராஜனின் இன்றைய அற்புதமான பந்து வீச்சு ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்ட்யா 76 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து, ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


க்ளென் மேக்ஸ்வெல் தனது சிறந்த பங்களிப்பை வழங்கினார். அவர் அருமையான அரைச் சதத்தை அடித்தார். இருப்பினும், ஜஸ்பிரீத் பும்ரா (Jasprit Bumrah)  உட்பட இந்திய பெளலர்கள் ஆஸ்திரேலியாவின் கனவை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.


Also Read | AUS vs IND: 3வது போட்டியில் விளையாடும் தமிழக வீரர் நடராஜன் பற்றி தெரியுமா? 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR