இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் தேர்வு செய்தனர். அந்த அணியில் டேன் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டார். 


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஜாதவ் 27 ரன்களும், பாண்டியா 25 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 118 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 


அடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாட துவங்கினார்கள். அந்த அணியில் ஆரொன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். வார்னர் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 


ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


நான்கு விக்கெட் வீழ்த்திய ஜேசன் பெரேன்டர்ஃப் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த டி-20 தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 3வது போட்டி வரும் 13-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.