சிட்னி: முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்து, ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்தது. 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அடைய களம் இறங்கிய இந்திய 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா (Australia) அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷிகர் தவான் மற்றும் மாயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த பின்னர் பெவிலியனுக்கு திரும்பினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் சரியாக ஆடாமல் அவுட் ஆனார்கள். 


சிகர் தவானுடன் இணைந்த ஹார்திக் பாண்டியா இருவரும் நன்றாக ஆடி அணிக்கு வெற்றி நம்பிக்கையை தந்தனர். இருவரும் சதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிகர் தவான் 74 (86) மற்றும் ஹார்திக் பாண்டியா 90(76) ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். அதேநேரத்தில் மற்ற வீரர்கள் யாரும் சரியாக நிலைத்து நின்று ஆடாததால், இந்திய (Team india) அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


ALSO READ | India vs Australia Series 2020-21 Schedule: இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்களின் முழு அட்டவணை


முன்னதாக ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் (Aaron Finch) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சதம் அடித்தனர். பிஞ்ச் 124 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஸ்மித்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி அவுட் செய்தார். ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். ஸ்மித் தனது 10 வது ஒருநாள் சதத்தை 62 பந்துகளில் அடைந்தார். 


பிஞ்ச் மற்றும் ஸ்மித் (Steven Smith) தவிர, க்ளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் 76 பந்துகளில் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி (Mohammed Shami) அதிக விக்கெட் எடுத்தார். 10 ஓவர்களில் 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்டத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR