இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்திய அணியில் சேர்கப்படாமல் உள்ளார். அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்திருக்கும் இளம் வீரரான அக்சர் படேல் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருவதால், ரவீந்திர ஜடேஜா மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்சர் படேல் சிறப்பான ஆட்டம்


இலங்கை அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 207 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சூர்ய குமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் இலங்கை அணியின் பந்துவீச்சுகளை அடித்து நொறுக்கினார். ஹசரங்கா பந்தில் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை விளாசி பிரமாதப்படுத்திய அவர், அரைசதம் அடித்து அனைவரது புருவத்தையும் உயர வைத்தார். இந்த போட்டியில் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை அக்சர் படேல் ஆட்டமிழக்காமல் இருந்தார்.  


வாசிம் ஜாஃபார் பாராட்டு



இலங்கை அணிக்கு எதிராக அக்சர் படேல் விளையாடிய விதத்தை வாசிம் ஜாஃபர் வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் பேசும்போது, ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு தான் என்றாலும், அவர் இல்லாத இடத்தை அக்சர் படேல் சிறப்பாக பூர்த்தி செய்வதாக தெரிவித்துள்ளார். ஒரு ஆல்ரவுண்டராக தன்னை அக்சர் நன்றாக வளர்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜாபர், 20 ஓவர் பார்மேட்டில் இந்திய அணிக்கு சூப்பரான ஒரு ஆல்ரவுண்டர் கிடைத்திருப்பது இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜடேஜாவின் இடம் இந்திய அணியில் இப்போதைக்கு ஆபத்தில் தான் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். 


ஜடேஜா ரெக்கார்டு 



34 வயதான ஜடேஜாவுக்கு நிறைய அனுபவம் உள்ளது. அவர் இதுவரை 60 டெஸ்ட், 171 ஒருநாள் மற்றும் 64 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 2523 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, 242 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதே நேரத்தில், ஒருநாள் போட்டிகளில் 2447 ரன்களுடன் 189 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 457 ரன்களுடன் 51 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அவர் கடைசியாக ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.


மேலும் படிக்க | IND vs SL: 3வது டி20-ல் இந்திய அணியில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ