ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இருப்பினும், இந்தியா போன்ற பெரிய நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை. வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெறுமா? அல்லது வேறு இடத்திற்கும் மாற்றப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் அல்லது இலங்கையில் நடத்தப்பட உள்ளதாவும் கூறப்படுகிறது. கடந்த 2022ம் ஆசிய கோப்பையில் இதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா பாகிஸ்தானில் விளையாட மறுத்தபோது, அந்த தொடர் கலப்பு முறையில் விளையாடப்பட்டது. பாகிஸ்தானில் சில போட்டிகளும்,  இலங்கையில் சில போட்டிகளும் நடத்தப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | SRH தக்கவைக்கப்போகும் இந்த 4 வீரர்கள்... மெகா ஏலத்திற்கு காவ்யா மாறன் போடும் தனி கணக்கு!


சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் எங்கு நடைபெற்றாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் பொறுப்பேற்கும். அவர்கள் தான் அதிகாரப்பூர்வ தொகுப்பாளராக இருப்பார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு ஐசிசி உலக கோப்பைகளிலும் பாகிஸ்தான் அணி அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. மேலும் டி20 உலகக் கோப்பை குரூப் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வியடைந்து, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முழுமூச்சில் இறங்கி உள்ளது பாகிஸ்தான். 


டி20 உலகக் கோப்பையில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி சில கடுமையான நிலைப்பாட்டை வீரர்களுக்கு கொண்டு வந்தார். முறையான பயிற்சி மற்றும் மோசமான பார்மில் உள்ள வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறினார். சமீபத்தில் பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்டில் இருந்து ஷாஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான பாகிஸ்தான் அணியில் ஒரு சில சீனியர் வீரர்கள் தவிர, நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.



சாம்பியன்ஸ் டிராபியில் நிச்சயம் இடம் பெரும் வீரர்களை கணக்கில் எடுத்தால் அதில், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப் இருப்பார்கள். இவர்களை தவிர ஃபக்கர் ஜமான், சயீம் அயூப் மற்றும் முகமது ஹரிஸ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அதே சமயம் அப்துல்லா ஷபீக் மற்றும் சவுத் ஷகீல் ஆகியோரும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சிறப்பாக விளையாடி வரும் அப்ரார் அகமது இடம் பெறவும் வாய்ப்புள்ளது. ஆல் ரவுண்டர்களில் ஷதாப் கான், சல்மான் அலி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாமிற்கு பதில், ரிஸ்வான் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. 


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான உத்ததேச பாகிஸ்தான் அணி


பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், ஃபகார் ஜமான், சவுத் ஷகீல், சைம் அயூப், முகமது ஹாரிஸ், அப்துல்லா ஷபீக், ஷதாப் கான்/சல்மான் ஆகா, ஹசீபுல்லா கான், ஷஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப், நசீம், நசீம், நசீம் குர்ரம் ஷாஜாத், அமீர் ஜமால்


மேலும் படிக்க | ரோஹித் சர்மா அடுத்த சீசனில் இந்த 2 அணிகளில்தான் இருப்பார்... அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ