இந்திய அணிக்கு தேர்வான ராகுல் டிராவிட் மகன் - புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

Rahul Dravid ; இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் மகன் சமித் டேவிட், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

Rahul Dravid ; இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சமித் டேவிட் இடம்பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் நான்கு நாள் போட்டிக்கான அணிகளில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

1 /7

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட இருக்கிறது. இதற்கான அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. 

2 /7

அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் பிளேயரான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஒருநாள் மற்றும் நான்கு நாள் போட்டிகளுக்கான இரண்டு அணிகளிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

3 /7

18 வயதான சமித் சமீபத்தில் மைசூரு வாரியர்ஸ் அணிக்காக மஹாராஜா டி20 டிராபியில் விளையாடினார். வலது கை பேட்ஸ்மேனான அவர், இந்த லீக்கில் 7 இன்னிங்ஸ்களில் 113.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 82 ரன்கள் எடுத்தார்.  

4 /7

ஒரு போட்டியில் மட்டும் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 33 (24) ரன்கள் எடுத்தார் சமித் டிராவிட். இதனைத் தொடர்ந்து அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

5 /7

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது அமான் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். சோஹம் பட்வர்தன் நான்கு நாள் போட்டிகளில் அணியை வழிநடத்துவார்.  

6 /7

இந்தியா U-19, ஆஸ்திரேலியா U-19 தொடர் செப்டம்பர் 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறுகிறது.  இரு அணிகளும் மூன்று 50 ஓவர் ஆட்டங்களில் விளையாட உள்ளன.  

7 /7

அதைத் தொடர்ந்து சென்னையில் இரண்டு நான்கு நாள் ஆட்டங்கள் நடக்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.