இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தேர்வை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார். ருதுராஜ் கெய்கவாட், ரிங்கு சிங் ஆகியோர் இந்த தொடருக்கான டி20 அணியில் தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியளிப்பதாகவும், அவர்கள் சிறப்பாக விளையாடியும் அணியில் இடம் கொடுக்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ருதுராஜ் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும்போதெல்லாம் தன்னை நிரூபித்திருப்பதாக தெரிவித்திருக்கும் பத்ரிராந், இப்படியான பிளேயர்களுக்கு பேட்பாய் இமேஜ் இருந்தால் தான் அணியில் இடம் கிடைக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த நடிகையை டேட்டிங் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா? வைரல் நடனமும், லேட்டஸ்ட் அப்டேட்டும்!


இது குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் பத்ரிநாத், " ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங் ஆகியோருக்கு கட்டாயம் நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் விளையாட முழு தகுதி படைத்தவர்கள். ஆனால் அவர்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. இந்த மாதிரியான சூழலின்போது தான், இரண்டு மூன்று பாலிவுட் நடிகைகளோடு எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும், உடம்பு முழுக்க பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும், அதனால் எந்நேரமும் செய்திகளில் இடம்பிடிக்கலாம். அப்படி இருந்தால் தான் இந்திய அணியிலும் விளையாட தேர்வு செய்யப்படுவார்கள் என நினைக்கிறேன்" என்றும் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.


அவரின் இந்த கடுமையான விமர்சனம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் பிளேயர்கள் ஏன் நீக்கப்படுகிறார்கள் என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேபோல், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது, அபிஷேக் சர்மா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கபடாதது குறித்து சரமாரி கேள்விகள் எழுந்துள்ளது. கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் இந்த முதல் தொடரிலேயே பல சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளார். 


அவர் வேண்டுமென்றே நன்றாக விளையாடும் பிளேயர்களை புறக்கணித்து என்ன சாதிக்கப்போகிறார் என்று தெரியவில்லை, இலங்கை தொடருக்கான இந்திய அணி தேர்வு என்பது அப்பட்டமான அரசியல் உள்நோக்கம் இருப்பதை பார்க்க முடிவதாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சசி தரூர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோரும் இலங்கை தொடருக்கான இந்திய அணி தேர்வை விமர்சித்துள்ளனர். 


மேலும் படிக்க | ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மட்டும் இல்லை! ரோஹித் சர்மாவும் அணி மாறுகிறார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ