இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 203 ரன்கள் தேவை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷப் பண்ட்  5(3) ரன்கள் எடுத்து நாட் அவுட்.  ஹர்த்திக் பாண்டியா 11(4) ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது ரன் எடுக்கும் போது ரன் அவுட் ஆனார்.


டோனி 56(36) ரன்களும், யுவராஜ்சிங் 27(10) ரன்களும்  எடுத்து அவுட் ஆனார்கள்.


டோனி 31(21) ரன்களும், யுவராஜ்சிங் 2(2) ரன்களும்  எடுத்து ஆடி வருகின்றனர். 15 ஓவருக்கு இந்தியா மூன்று விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.


சுரேஷ் ரெய்னா 63(45) எடுத்த நிலையில் கேட்ச் அவுட்டானார்.


சுரேஷ் ரெய்னா 43(33) ரன்களும் , டோனி 3(5) ரன்களும்  எடுத்து ஆடி வருகின்றனர். 10 ஓவருக்கு இந்தியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்துள்ளது.


லோகேஷ் ராகுல் 22(18) ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார்.


லோகேஷ் ராகுல் 22(17) ரன்களும், சுரேஷ் ரெய்னா 32(21) ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர். 7 ஓவருக்கு இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.


லோகேஷ் ராகுல் 13(14) ரன்களும், சுரேஷ் ரெய்னா 31(20) ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர். 6 ஓவருக்கு இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.


லோகேஷ் ராகுல் 13(13) ரன்களும், சுரேஷ் ரெய்னா 17(13) ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர். 5 ஓவருக்கு இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.


2 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோஹ்லி ரன் அவுட்  ஆனார். இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டான் அவரை ரன் அவுட் ஆக்கினார்


3-வது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் பெங்களூரில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலி பவுலிங் தேர்வு செய்தார். எனவே இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது 


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


தற்போது இந்தியா-இங்கிலாந்து இரு அணிகளுமே 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரை வெல்வது யார் என்று ஆவலுடன் ரசிகர்கள் இருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.


இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரெய்னா, யுவராஜ்சிங், டோனி, மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, யுசுவேந்திர சகால், ஆசிஷ் நெக்ரா, பும்ரா, பர்வேஷ் ரசூல், புவனேஷ்வர் குமார், ரிஷப் பண்ட், மன்தீப் சிங்.


இங்கிலாந்து அணி: மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், சாம் பில்லிங்ஸ், ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், பட்லர், மொயின் அலி, ஜோர்டான், ஆதில் ரஷீத், மில்ஸ், டேவிட் வில்லி, பேர்ஸ்டோவ், ஜேக்பால், புளுன்கெட், டாசன்.