புது டெல்லி: நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 உறுப்பினர்களைக் கொண்ட டீம் இந்தியாவை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயமடைந்த ஷிகர் தவானுக்கு மாற்றாக பிருத்வி ஷா ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல அவருக்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடருக்கு தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நல்ல பந்துவீசியதால் நவ்தீப் சைனி பயனடைந்துள்ளார். அவருக்கு ஒருநாள் அணியிலும் இடம் வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 5, இரண்டாவது போட்டி பிப்ரவரி 8 மற்றும் மூன்றாவது பிப்ரவரி 11 அன்று நடைபெறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிசிசிஐ ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 இந்திய அணியை அறிவித்திருந்தது, அதே நேரத்தில் ஒருநாள் அணி இன்று அறிவிக்கப்பட்டது. பிரித்வி ஷாஇதுவரை எந்த ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவில்லை. பிருத்வி ஷா கடைசியாக 2018 அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். அந்த போட்டியில் அவர் முதல் இன்னிங்க்சில் 70, இரண்டாவது இன்னிங்சில் 33 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிராக பிரித்வி ஷா 100 பந்துகளில் 150 ரன்கள் எடுத்திருந்தார் குறிப்பிடத்தக்கது.


நியூசிலாந்து மற்றும் இந்திய அணி ஒருநாள் தொடருக்கு முன்பு ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) அன்று நடைபெற உள்ளது.


இந்திய ஒருநாள் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி, சர்துல் தாக்கூர், கேதார் ஜாதவ்.


இந்திய டி 20 அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்கூர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.