IPL 2019 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது!
எதிர்வரும் IPL 2019 தொடரின் குரூப் போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் IPL 2019 தொடரின் குரூப் போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
முதல் போட்டி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், எல்லா அணிகளும் தங்களது மைதானத்தில் சரி பாதியாக 7 போட்டிகளில் விளையாடுகின்றன.
இன்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் படி நடப்பு சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், தங்களது சேப்பாக்கம் மைதானத்தில் துவக்க விழாவுடன் முதல் போட்டியில் விளையாடுகிறது.
ஏற்கனவே அறிவித்தது போல், இந்த போட்டியில், சென்னை அணி, பெங்களூரு அணியுடன் மோதுகிறது. அதை தொடர்ந்து, மார்ச் 31ல் ராஜஸ்தான், ஏப்ரல் 6-ஆம் நாள் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஏப்ரல் 9-ஆம் தேதி கொல்கத்தா, ஏப்ரல் 23-ஆம் நாள் ஹைதராபாத், ஏப்ரல் 26-ஆம் நாள் மும்பை மற்றும் மே 1-ஆம் நாள் டெல்லி ஆகிய அணிகளுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது.
மார்ச் 26-அம் நாள் டெல்லி, ஏப்ரல் 3-ஆம் தேதி மும்பை, ஏப்ரல் 11-ஆம் தேதி ராஜஸ்தான், ஏப்ரல் 14-ஆம் தேதி கொல்கத்தா, ஏப்ரல் 17-ஆம் தேதி ஹைதராபாத், ஏப்ரல் 21-ஆம் நாள் பெங்களூரு, மே 5-ஆம் தேதி பஞ்சாப் ஆகிய ஊர்களுக்கு சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.
கடைசி குரூப் போட்டி மே 5-ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.