ஆண்கள் அணிக்கும், பெண்கள் அணிக்கும் ஒரே சம்பளம்தான் - பிசிசிஐயின் புரட்சிக்கர அறிவிப்பு
இனி இந்திய ஆடவர் அணிக்கும், மகளிர் அணிக்கும் ஒரே அளவிலான சம்பளம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சில் (பிசிசிஐ), இந்திய கிரிக்கெட்டையே மாற்றும் அளவிற்கான மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆடவர் அணிக்கும், மகளிர் அணிக்குமான ஒப்பந்த அடிப்படையில் போடப்படும் ஆட்ட தொகை என்பது ஒரே அளவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் அணியை விட ஆடவர் அணியினர் நீண்ட காலமாக அதிக சம்பளம் பெற்று வந்த நிலையில், இந்த அறிவிப்பு புரட்சிக்கரமான முடிவாக பார்க்கப்படுகிறது. இதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். "ஆடவர், மகளிர் அணிகளுக்கு இடையே நிலவும் பாகுபாட்டைச் சமாளிப்பதற்கான முதல் படியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் படிக்க | T20 world cup: உலக கோப்பை இந்திய அணியில் இருக்கும் வீரருக்கு ஷாக் கொடுத்த ஐபிஎல் அணி
பிசிசிஐயுடன் ஒப்பந்தம் செய்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய சமபங்கு கொள்கையை நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம். கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தின் புதிய சகாப்தத்திற்குள் நாம் செல்லும்போது ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டித் தொகை ஒரே அளவில் இருக்கும். இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு, ஆண் வீரர்களுக்கு வழங்கப்படும் போட்டிக் கட்டணமே வழங்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்ட் ( ரூ. 15 லட்சம்), ஒருநாள் போட்டி (ரூ. 6 லட்சம்), டி20 (ரூ. 3 லட்சம்) என சமபங்கு ஊதியம் என்பது மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு, மகளிர் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என பிசிசிஐயின் ஆண்டு பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்ட சில தினங்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணியும் சர்வதேச போட்டிகளில் சாதித்து வருகின்றன. 2017 மகளிர் ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கும், 2020 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறின. சமீபத்தில் நடந்த, 2022 காமன்வெல்த் தொடரிலும் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தது. இந்த மாதம் நடைபெற்ற மகளிர் ஆசியக்கோப்பையிலும் இந்திய சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆடவர் அணிக்கும், மகளிர் அணிக்கும் ஒரு அளவில் போட்டித் தொகையை வழங்கும் முடிவை, சில மாதங்களுக்கு முன் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ICC T20 World cup - IND vs NED : இந்தியா பேட்டிங்; சதம் அடிப்பாரா விராட் கோலி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ