கேப்டன் விராட் கோலியின் கருத்துக்கு BCCI பதிலடி! திரைக்கு பின் நடந்தது என்ன?
கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்கியது தொடர்பான அவரது கருத்துக்கு பிசிசிஐ பதிலடி கொடுத்துள்ளது
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட்டில் தற்போது பரபரப்பு நிலவி வருகிறது. கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை பிசிசிஐ நீக்கியதில் இருந்து, புதிய சர்ச்சைக்குரிய விஷயங்கள் தொடர்ந்து விவாதிக்கபப்ட்டு வருகின்றன. விராட்டின் கருத்துக்கு பிசிசிஐ தரப்பில் இருந்தும் பதில் வந்துள்ளது.
புதன்கிழமையன்று, விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பதவியை விட்டு தான் விலக விரும்பவில்லை என்று கூறினார். இது தவிர, டி20 கேப்டன்சி குறித்தும் அவர் வெளியிட்ட கருத்துகள் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இதனையடுத்து தற்போது விராட்டுக்கு பிசிசிஐ பதிலடி கொடுத்துள்ளது.
விராட்டின் கருத்துக்கு பிசிசிஐ பதிலடி
விராட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று சொல்வது முற்றிலும் தவறு என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. விராட் ஏற்கனவே டி20 கேப்டன் பதவியை விட்டு விலகிவிட்டதாகவும், அதன் பிறகு வெள்ளை பந்து வடிவ போட்டிகளில் இரண்டு கேப்டன்கள் இருப்பது சரிவராது என்றும் பிசிசிஐ கூறுகிறது. விராட்டை கேப்டன் பதவியில் (Captain Virat Kohli) இருந்து விலகுமாறு செப்டம்பர் மாதத்திலேயே பிசிசிஐ கேட்டுக்கொண்டதாக கிரிக்கெட் வாரியம் கூறுகிறது.
ODI கேப்டன்சி பற்றிய தகவல்களும் வழங்கப்பட்டன
இது தவிர, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தன்னை நீக்குவது குறித்து 1.5 மணி நேரத்திற்கு முன்புதான் பிசிசிஐ தன்னிடம் தெரிவித்ததாகவும் விராட் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ALSO READ | நான் தலைமை பயிற்சியாளராக இருந்ததில் பலருக்கும் அதிருப்தி- ரவி சாஸ்திரி ஓபன் டாக்!
ஆனால் கேப்டன் பதவியில் இருந்து விராட் நீக்கப்பட்டபோது, தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா ஏற்கனவே அவரை அழைத்து தகவல்கள் அனைத்தையும் விளக்கமாக தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ரோஹித்துடனான மோதல்
ரோஹித் சர்மா மிகச் சிறந்த கேப்டன் என்று கூறும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் விராட் கோலி, அவருடைய வியூகம் மிகவும் நன்றாக உள்ளது என்று சொல்கிறார். ஐபிஎல் மற்றும் இந்திய அணியின் போட்டிகளில் அவருடைய திறமை நன்றாக வெளிப்ப்ட்டுள்ளது என்று தெரிவித்தார்.
காயம் காரணமாக ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது. இதுகுறித்து டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறுகையில், 'தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்பது அணிக்கு இழப்பு தான் என்றும் கூறினார்.
READ ALSO | நான் கேப்டன் அல்ல என்பதை அவர்கள்தான் தீர்மானித்தார்கள் - விராட் கோலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR