பிசிசிஐ-ல் அடுத்த அதிரடி: இவங்க பதவி எல்லாம் கூண்டோட காலியாக போகுது
பிசிசிஐ தேர்வாளர்கள் குழுவை கூண்டோடு கலைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி பொறுப்பேற்றுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது பிசிசிஐயில் அடுத்த முக்கியமான பெரிய மாற்றம் நடைபெற இருக்கிறது. இருப்பினும், அந்த மாற்றத்துக்கு டி20 உலகக் கோப்பை முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதாவது பிசிசிஐ தேர்வுக்குழுவை முழுமையாக மாற்றியமைக்க புதிய பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு மாற்றங்கள்
தேசிய தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மாவின் பதவி இப்போதைக்கு ஊசலில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை மாறறியமைக்கலாம் என்று கூறப்படுகிறது. அணி தேர்வில் இருக்கும் குளறுபடிகள் இதற்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும் படிக்க | டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தமிழர்...!
சேத்தன் சர்மாவின் மாற்றம்
பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர், “டி20 உலகக் கோப்பையில் இந்தியா எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து நிறைய விஷயங்கள் இருக்கும். தேர்வு குழுவில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் சேத்தன் சர்மாவின் செயல்பாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். அதேநேரத்தில் BCCI ஒரு புதிய தேர்வுக்குழுவை தேர்ந்தெடுக்க விரும்பினால், அதுவரை அவர் பதவியில் தொடர்வார்" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு இந்தியா போகாது... ஜெய் ஷா அறிவிப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ