என்னைவிட அவர்தான் பெஸ்ட் - கோலிக்கு சர்ட்டிஃபிக்கேட் கொடுத்த கங்குலி
விராட் கோலி தன்னைவிட திறமையானவர் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ரன் மெஷின் என அழைக்கப்படுபவர் விராட் கோலி. அவரது பேட்டிங்கையும், அவர் கிரிக்கெட்டை அணுகும் விதத்தையும் பார்த்த பலர் உலக கிரிக்கெட்டை அவர் ஆளப்போகிறார் என ஆரூடம் கூறினார். அதற்கேற்றார் போல்தான் கோலியின் செயல்பாடும் இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் கடுமையான ஃபார்ம் அவுட்டில் இருந்தார்.சதங்களில் சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடிப்பார் கோலி என உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, அவரோ 1020 நாள்கள் சதமடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றிவந்தார்.
இதற்கிடையே நாம் மெண்ட்டலி வீக்காக இருக்கிறேன் என உண்மையை வெளிப்படையாகவும் அவர் கூறினார். இப்படிப்பட்ட சூழலில் ஆசிய கோப்பை தொடர் தொடங்கியது. பாகிஸ்தானுடனான போட்டியில் டீசண்ட்டான ஸ்கோர் அடித்தார். அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சோபிக்க தவற ஆசிய கோப்பையிலும் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பமாட்டாரா என ரசிகர்கள் ஏங்கினர்.
அவர்களது ஏக்கத்தை தீர்க்கும் விதமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஓபனிங் இறங்கிய கோலி. சிறப்பாக விளையாடினார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 1000 நாள்களுக்கு பிறகு தனது 71ஆவது சதத்தை அந்தப் போட்டியில் பூர்த்தி செய்தார். இதனையடுத்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆனந்த கூத்தாடினர். சமூக வலைதளங்களில் கோலியை புகழ்ந்து பல வீடியோ எடிட்கள் வெளியாகின. மேலும் விராட் கோலியின் இந்த கம்பேக் மட்டும்தான் ஆசிய கோப்பை தொடரில் ரசிகர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரு இனிமையான நினைவு ஆகும்.
இந்நிலையில் விராட் கோலி தன்னைவிட திறமையானவர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ஒப்பிடுதல் என்பது ஒரு வீரருக்கு திறமையின் அடிப்படையில் இருக்க வேண்டும். அவர் என்னைவிட திறமையானவர் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வெவ்வேறு தலைமுறைகளில் கிரிக்கெட் விளையாடினோம்.
நாங்கள் நிறைய போட்டிகள் விளையாடி இருக்கிறோம் . நான் எனது தலைமுறையில் விளையாடினேன், அநேகமாக. நான் விளையாடியதைவிட அதிகமாக போட்டிகள் அவர் விளையாடுவார் . தற்போதைய கணக்குப்படி நான் அவரைவிட அதிகமாக விளையாடி இருக்கிறேன். ஆனால் அவர் அதை கடந்து விடுவார். அவர் அபாரமானவர்” என்றார்.
மேலும் படிக்க | கோலிக்கு முன்னாள் வீரர்கள் சப்போர்ட்... அப்செட்டில் ராகுல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ