நாடாவின் ஊக்கமருந்து சோதனையை மறுத்த பிசிசிஐ!!
நாடா அமைப்பு மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை தேவை அற்றது என இந்திய கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனையை நாடா அமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த சோதனை நடத்த முடிவு செய்து விளையாட்டு துறை சம்பந்தமான துறைகளிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதி இருந்தது.
ஆனால் நாடாவின் வேண்டுகோளை நிராகரித்த பிசிசிஐ கூறியது, பிசிசியிடம் ஏற்கனவே ஊக்கமருந்து சோதனை குழு இருக்கிறது. அந்த குழு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தி வருகிறது. ஆகவே நாடாவின் ஊக்கமருந்து சோதனை தேவை அற்றது என பிசிசிஐ கூறியுள்ளது.
நாங்கள் தன்னார்வ அமைப்பு. எனவே உலக ஊக்கமருந்து எதிர்ப்பு ஆணையத்தின் படி நாங்கள் அனைத்து விளையாட்டு வீரர்களையும் சோதனை செய்ய வேண்டும். எனவே பிசிசிஐ இதற்கு கண்டிப்பாக அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுள்ளது.
நாடா அமைப்பு குழுவில் இந்திய அதிரடி கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.