புது தில்லி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிராகரிக்கப்பட்ட பின்னர், அது புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாகிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு செல்லும், இரண்டு அணிகளுக்கும் இடையே இருதரப்பு தொடர் நடைபெறும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நேருக்கு நேர் மோதும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி செல்வது கடினம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ -BCCI ) கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடத்த வாய்ப்பு இல்லை -BCCI!


ஐ.ஏ.என்.எஸ்ஸுடன் (IANS) பேசிய பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, தென்னாப்பிரிக்கா தொடருக்கான சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி செல்ல முடியாது என்று கூறினார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அணியின் வீரர்கள் கடந்த 50-60 நாட்களாக சரியாக பயிற்சி செய்யவில்லை என்பதும் இதற்குக் காரணம்.


மேலும் அவர் கூறினார், "இது சரியான வழியில் சாத்தியமில்லை. உடற்தகுதி பயிற்சி என்பது ஒரு முக்கிய விஷயம். அதேநேரத்தில் பேட் மற்றும் பந்தைக் கொண்டு பயிற்சி செய்வதும் மிகவும் முக்கியமான விஷயம். நமது வீரர்கள் கடந்த 50-60 நாட்களாக பேட் அல்லது பவுலிங் பயிற்சி ஈடுபடவில்லை. அப்படி இருக்கும் நிலையில், அவர்கள் நேராகச் சென்று சர்வதேச போட்டிகளில் விளையாடுவார்கள் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம். ஆம், அவர்கள் உடற்தகுதி அளவை மேம்படுத்துவதற்காக அவர்கள் உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சி தேவை என்றார்.


மேலும் படிக்க: ஆங்கில பேச நான் வெள்ளைக்காரன் இல்லை; கிரிக்கெட் ஆட்டக்காரன் -பாபர் ஆசாம்!


"ஆமாம், நாங்கள் இதை முன்பே கூறியுள்ளோம், இரு முனைத் தொடர்களின் வாக்குறுதியை பி.சி.சி.ஐ மதிக்கிறது, இல்லையென்றால் அது சரியான நேரத்தில் இரு அணிகளும் விளையாடும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் தொடரை விளையாட தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வது கடினமானது." என்றார்.


இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டது


மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக தென்னாப்பிரிக்காவின் அணி இந்தியாவுக்கு விஜயம் செய்தது. தர்மஷாலாவின் முதல் ஒருநாள் போட்டியை மழை காரணமாக நடத்த முடியவில்லை. இதன் பின்னர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக லக்னோ மற்றும் கொல்கத்தா போட்டிகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.