பாக்கிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட ஒருநாள் கேப்டன் பாபர் ஆசாம் திங்களன்று (மே 18) முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமதுவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தன்வீர் ‘பாபர் தனது ஆங்கில மொழி பேசும் திறனை மேம்படுத்த வேண்டும்’ என்று கருத்து தெரிவித்த நிலையில் இந்த கண்டனம் வெளியாகியுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், முன்னாள் கேப்டன் இன்சாம்-உல்-ஹக் மற்றும் சர்ப்ராஸ் அகமது உட்பட பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் போட்டிக்கு பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்புகளில் பலவீனமான ஆங்கில மொழி பேசும் திறமைக்காக சமூக ஊடகங்களில் அடிக்கடி விமர்சிக்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தன்வீர் அகமது சமீபத்தில் ஒரு யூடியூப் வீடியோவை வெளியிட்டார், இந்த வீடியோவில் அவர் பாபர் ஆங்கிலம் கற்க வேண்டும், அவரது ஒட்டுமொத்த ஆளுமையை மேம்படுத்தவும், சிக்கலைச் சமாளிக்க ஆங்கிலம் கற்பது அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Babar Azam about his Comparison with Virat Kohli & Solid Cover drive (reply) about criticism on his English (Language)
Well played
Video via PCB pic.twitter.com/ntzxioxgSi
— Abdul Ghaffar (@GhaffarDawnNews) May 18, 2020
"பாபர் ஆசாம் தனது ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டும், இது அவசியம். யாராவது ஒருவர் கேப்டனாக பதவி உயர்வு பெரும்போது, டாஸ் மற்றும் போட்டிக்கு பிந்தைய விளக்கக்காட்சியின் போது பேச வேண்டியது அவசியம். மேலும், அவர் வெவ்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் போது பல்வேறு சேனல்களிலும் நேர்காணல்களை வழங்க வேண்டும். எனவே, தற்போது பாபர் ஆங்கிலம் கற்பது மிகவும் முக்கியமான ஒன்று" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
5 டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய 41 வயதான தன்வீர், தற்போது பாபருக்கு வினோதமாக பரிந்துரை அளித்தமைக்காக சமூக ஊடகங்களில் பரபரப்பை எதிர்கொண்டுள்ளார்.
தன்வீரின் அறிவுரைக்கு பதிலளித்த பாபர், “நான் ஒரு கிரிக்கெட் வீரர், எனது வேலை கிரிக்கெட் விளையாடுவது. நான் ஆங்கிலம் முழுவதுமாக அறிந்த ‘கோரா’ அல்ல. எனினும் நான் ஆங்கிலம் கற்று வருகிறேன், ஆனால் அது குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல’ என தெரிவித்துள்ளார்.
இதன்போது பாபர், கொரோனாவுக்கு பிந்தைய கிரிக்கெட் எப்படி இருக்கும் என்பது குறித்தும் பேசினார். "கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் பெரும்பான்மை போட்டிகளை துபாயில் விளையாடி எங்களுக்கு, ரசிகர்கள் இல்லாத அரங்கில் விளையாடுவது எவ்வளவு கடினமான ஒன்று என தெரியும். மற்ற அணிகளை காட்டிலும் இந்த வலி எங்களுக்கு அதிகமாகவே தெரியும். வீரர்களை உற்சாகப்படுத்தும் ரசிகர்கள் இல்லாமல் களத்தில் விளையாடுவது எவ்வளவு கடினமான விஷயம் என்பது விவரிக்க இயலாத ஒன்று" என குறிப்பிட்டுள்ளார்.