துணி விற்கும் சர்வதேச முன்னாள் கிரிக்கெட் நடுவர் - பிசிசிஐ மீது கடும் விமர்சனம்
ஐசிசி நடுவராக இருந்து பிரபலமான பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுஃப், தற்போது பாகிஸ்தானில் துணி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆசாத் ரவுஃப், சர்வதேச கிரிக்கெட் பேனலில் பிரபலமான நடுவராக இருந்தார். நடுவர் பணியில் இருந்து விலகிய பின்னர் பாகிஸ்தானில் இருக்கும் லாண்டா பஜாரில் துணிக்கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். கிரிக்கெட் உலகில் இருந்து அவர் காணாமல்போன நிலையில், அண்மையில் சர்ச்சைக்குரிய விஷயத்தில் லைம் லைட்டுக்கு வந்துள்ளார்.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு பயம்காட்டிய அயர்லாந்து அணிக்கு குவியும் பாராட்டு
அதாவது ஐசிசி தொடர்களைக் கடந்து பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர்களிலும் நடுவராக பணியாற்றிய அவர் மீது சூதாட்ட புகார்கள் எழுந்தன. சர்வதேச புக்கிகளிடம் இருந்து பணம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து ஐபிஎல் நடுவர் பேனலில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டார்.இவரின் செயல்பாடு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பேசியதை சர்ச்சையாக உருவானது.
இதற்கு பதில் அளித்துள்ள ஆசாத் ரவுஃப், ‘2013 ஆம் ஆண்டு என் மீது சூதாட்ட புகார்கள் சுமத்தப்பட்டன. ஆனால் 3 ஆண்டுகள் தூங்கிய பிசிசிஐ 2016 ஆம் ஆண்டு தான் திடீரென கண் விழித்து விசாரணையை தொடங்கியது. என் மீது சுமத்தப்பட்ட புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், வற்புறுத்தலின்பேரில் விசாரணை நடைபெற்றது. பிசிசிஐ எந்த ஆதாரத்தையும் எனக்கு எதிராக கொடுக்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் நீதிபதி ஆதாரம் மற்றும் சாட்சியங்கள் எங்கே? என கேள்வி எழுப்பினார். குற்றப்பத்திரிக்கையில் ஆதாரம் இல்லை என்பது நீதிபதிக்கே தெரிந்துவிட்டது.
இருப்பினும் 2013 ஆண்டு நான் ஐசிசியிடம் என்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். புகார் வந்தால் ஐசிசிக்குதான் நான் பதிலளிக்க வேண்டுமே தவிர, பிசிசிஐக்கு இல்லை. பிசிசிஐ ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது. பிசிசிஐ தெரிவித்த புகாரை ஐசிசி கண்டுகொள்ளவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ரோகித் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த அவரது மகளின் கியூட் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR