ரோகித் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த அவரது மகளின் கியூட் வீடியோ வைரல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்து அவரது மகள் கொடுத்த அப்டேட் வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 28, 2022, 05:07 PM IST
  • கொரோனா வைரஸால் ரோகித் பாதிப்பு
  • ஹோட்டலில் ஓய்வெடுத்து வருகிறார்
  • ரோகித் குறித்து பேசிய மகளின் வைரல் வீடியோ
ரோகித் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த அவரது மகளின் கியூட் வீடியோ வைரல் title=

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் சென்றிருக்கும் இந்திய அணி, லீசெஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அந்த அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ரோகித்சர்மா, திடீரென 2வது இன்னிங்ஸில் களமிறங்கவில்லை. மேலும், மைதானத்துக்கும் அவர் வராததால் ரோகித் சர்மாவுக்கு என்ன ஆச்சு? என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதுகுறித்து விளக்கம் அளித்த பிசிசிஐ, கடந்த சனிக்கிழமை இரவு ரோகித் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தது.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நீக்கம்?

அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிடிவ் என வந்ததால், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்புக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒரு வாரமாக சிகிச்சையில் இருக்கும் அவர், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்குவாரா? என தெரியவில்லை. ஒருவேளை அவர் இந்திய அணிக்கு திரும்பாவிட்டால், அது ஒட்டுமொத்த அணிக்கும் பின்னடைவாக இருக்கும். 

பிசிசிஐ வட்டாரங்கள் இது குறித்து கொடுத்துள்ள விளக்கத்தில், ரோகித் சர்மா மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாகவும், நலம் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவாரா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. இதனிடையே, ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் ஆல்ரைட் என்பது போல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். 

அந்தப் புகைப்படம் கொரோனா வைரஸில் இருந்து ரோகித் குணமடைந்துவிட்டார் என புரிந்து கொள்ளலாம் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரோகித் சர்மாவின் மகள் செய்தியாளர்களிடம் பேசும்போது, தன்னுடைய தந்தை நலமாக இருக்கிறார். ஹோட்டலில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார் என கியூட்டாக பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | இந்திய அணிக்கு இவரை கட்டாயம் எடுங்க - சுனில் கவாஸ்கர் சொல்லும் இளம் வீரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News