விடைபெற்றார் ஜூலன் கோஸ்வாமி! இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனை
Jhulan Goswami Bids Adiue: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி...
லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி. ரோஜர் பெடரர் டென்னிஸ் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்ற நிலையில், மற்றுமொரு பிரபல இந்திய விளையாட்டு ஆளுமையும் விடை பெற்றார். விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் விளையாட்டுப் ப்போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என்பது கவலை தரும், கண்ணீரைத் தரும் விஷயம் என்றாலும் இது தவிர்க்க முடியாதது. பெடரர் தனது இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது அவரது துரதிருஷ்டவசம் என்றாலும், அவரது மனநிலையும் அதற்கு முக்கியக் காரணம். .
ஆனால் ஜூலன் கோஸ்வாமியின் அணி, இறுதிப் போட்டியில் வெற்றிவாகையைச் சூடி, பெருமையுடன் வீராங்கனையை ஆனந்தக் கண்ணீருடன் அனுப்பி வைத்தது.
தனது இறுதிப் போட்டியில், அணியினருடன் சேர்ந்து ஜூலன்ன் கோஸ்வாமி இங்கிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தார்.
மேலும் படிக்க | டென்னிஸ் சாதனை நாயகன் ரோஜர் பெடரரின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக் கோப்பைகள்
தனது கடைசிப் போட்டியில் பேட்டிங் செய்ய களமறிங்கிய இறங்கிய கோஸ்வாமியை, இங்கிலாந்து அணி வீராங்கனைகள் இருபுறமும் அணிவகுத்து நின்று வரவேற்றனர். அதேபோல, பந்து வீசுவதற்காக வந்த ஜூலன் கோஸ்வாமிக்கு, மைதானத்தின் இரு புறங்களிலும் அணிவகுத்து நின்று இந்திய வீராங்கனைகள் வரவேற்பு கொடுத்தனர்.
தனது கடைசி போட்டியில், 10 ஓவர்களில் வீசி 3 மெய்டன்களுடன் 2 விக்கெட் வீழ்த்தினார் ஜூலன் கோஸ்வாமி. இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஜூலன் கோஸ்வாமி பேசியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
1997ஆம் ஆண்டில், அதாவது 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஈடன் கார்டனில் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் எல்லைகளில் வரும் பந்து பொறுக்கும் சிறுமியாக மைதானத்தில் களம் இறங்கினேன். நானும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என கனவு அன்று எனக்குத் தோன்றியது. எனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்க விரும்பி, அதற்காகநிறைய முயற்சி செய்தேன். எனது நாட்டிற்காக விளையாடியது என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | சென்னை ஓபனில் தோல்வியடைந்தார் கர்மன் தண்டி
ஜூலன் கோஸ்வாமி பின்னணி
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய நகரமான சக்தாஹா எனப்படும் சக்தாவில் பிறந்தவர் ஜூலன் கோஸ்வாமி. சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜூலன் கோஸ்வாமி, விளையாட்டுத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு என்றும் விடிவெள்ளியாக இருப்பார்.
கால்பந்து ரசிகையாக இருந்தாலும், கிரிக்கெட்டில் கோலோச்சிய பல பிரபலங்களின் பட்டியலில் இடம் பெற்ற கோஸ்வாமி, இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீராங்கனைகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தவர்.
இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடினார் ஜூலன் கோஸ்வாமி. ஆனால் இரண்டிலும் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க | இனி டென்னிஸ் விளையாட மாட்டேன்: ரோஜர் ஃபெடரரின் முடிவும் சக வீரர்களின் கண்ணீரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ