டென்னிஸ் சாதனை நாயகன் ரோஜர் பெடரரின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக் கோப்பைகள்

Roger Federer: டென்னிஸ் மன்னன் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது டென்னிஸ்வாழ்க்கையில், அவர் பல பெரிய மைல்கற்களை அடைந்துள்ளார். அவற்றுள் சில...

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 41 வயதான அவர், தனது உடல் தகுதியின் அடிப்படையில் ஓய்வை அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | இந்த நாள் வரவே கூடாது என்று விரும்பினேன்: நடாலின் பிரியாவிடை!

1 /7

2003 மற்றும் 2006 க்கு இடையில், ரோஜர் ஃபெடரர் அவர் பங்கேற்ற ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றார். ஜோர்ன் போர்க் தனது முதல் ஆறு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் வென்றாலும், ஏழில் வென்ற ஒரே நபர் ரோஜர் பெடரர். (புகைப்படம்: AFP)

2 /7

டென்னிஸ் வரலாற்றில் விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் பட்டங்களை தொடர்ந்து 4 ஆண்டுகள் (2004 மற்றும் 2007 க்கு இடையில்) வென்ற ஒரே வீரர் ரோஜர் பெடரர் ஆவார். (புகைப்படம்: AFP)

3 /7

ரோஜர் பெடரர் டென்னிஸ் உலகில், பல சாதனைகளை முறியடித்துள்ளார். 2003 இல் வியன்னா ஓபன் மற்றும் 2005 இல் பாங்காக் ஓபன் இடையே, இறுதிப் போட்டிகளில் தொடர்ந்து 24 வெற்றிகளைப் பதிவு செய்தார் பெடரர். (புகைப்படம்: AFP)

4 /7

யுஎஸ் ஓபன் (2004 முதல் 2009 வரை) மற்றும் விம்பிள்டன் (2003 முதல் 2008 வரை) ஆகிய இரண்டிலும் 40-போட்டி வெற்றிகளை பதிவு செய்த ஒரே வீரர் ரோஜர் பெடரர் ஆவார். (புகைப்படம்: AFP)

5 /7

புல் மைதானங்களில் ரோஜர் பெடரரின் ஆதிக்கம் அதிகம், புல் மைதானங்களில் மொத்தம் 19 பட்டங்களை வென்றுள்ளார் ரோஜார் பெடரர்.  2003 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்கு இடையில் ரோஜர் 65 வெற்றிக் கோப்பைகளை கைப்பற்றியுள்ளார். (புகைப்படம்: AFP)

6 /7

ரோஜர் ஃபெடரர் 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு உலகின் நம்பர் 1 ஆனார் மற்றும் 237 வாரங்கள் அதை தக்க வைத்துக் கொண்டார். இந்த பட்டியலில் பெடரரை அடுத்து, ஜிம்மி கானர்ஸ் 159 வாரங்கள் முதல் இடத்தில் இருந்த சாதனையை செய்துள்ளார்  

7 /7

ரோஜர் பெடரரின் சக போட்டியாளரான ரஃபேல் நடால், பெடரரின் ஓய்வு குறித்து தெரிவித்திருக்கும் வருத்தமே ரோஜர் பெற்ற வெற்றிக் கோப்பைகளை விட பெரியது என்று பலரும் கூறுகின்றனர். "எனது அருமை நண்பரும், போட்டியாளருமான பெடரர், ஓய்வை அறிவிக்கும் நாள் வரவே கூடாது என்று விரும்பினேன். இந்த நாள் எனக்கும், விளையாட்டிற்கும் மிகுந்த சோகமான தினமாகும். இத்தனை ஆண்டுகளாக விளையாட்டுக் களத்திலும், களத்திற்கு வெளியேயும் பல அற்புதமான தருணங்களை ரோஜருடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி மற்றும் பெருமை என்பதோடு, எனக்கான மிகப்பெரும் பாக்கியமாகவும் கருதுகிறேன்" என்ற ரஃபேல் நடாலின் உருக்கமான பதிவு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.