புது டெல்லி: இதுவரை பிக் பாஷ் லீக் (Big Bash League) தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து வருகிறது. ஏனெனில் இந்த தொடரில் பேட் மற்றும் பந்துக்கு இடையில் சில சுவாரசியமான போட்டிகளை வழங்கியுள்ளது. டி20 போட்டிகள் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு தான் சாதகமாக இருக்கிறது என்று விமர்சிக்கப்படுகிறது. ஆனால் பிக் பாஷ் லீக் தொடரில் பந்து வீச்சாளர்களும் சில அற்புதமான சாதனைகளை செய்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார்கள். டி20 போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது என்ற செய்தியை தவறு எம நிரூபிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று (புதன்கிழமை) நடந்த இரண்டு வெவ்வேறு பிபிஎல் ஆட்டங்களில், ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் முறையே அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றி உள்ளனர்.


 



உலகெங்கிலும் வெவ்வேறு லீக் தொடர்களில் விளையாடி ரஷீத் கான், சிட்னி சிக்ஸர்களுக்கு எதிராக அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக தனது மூன்றாவது டி 20 ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தார்.


இந்த ஹாட்ரிக்-கை உலகின் நம்பர் ஒன் டி 20 பந்து வீச்சாளரான ரஷீத் கான் இரண்டு ஓவர்களில் எடுத்தார். அவர் முதலில் 11 வது ஓவரின் இரண்டாவது கடைசி பந்தில் எதிர் அணியின் கேப்டன் ஜேம்ஸ் வின்ஸை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் ஜாக் எட்வர்ட்ஸ் நீக்கினார். அதன்பிறகு ரஷீத், 13 வது ஓவரின் முதல் பந்தில் ஜோர்டான் சில்க் (16) அவுட் செய்து ஹாட்ரிக் சாதனை செய்தார். 


 



ரஷீத் கான் நான்கு ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைபற்றினார். ஆனாலும் அவரது அணி வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் எதிர் அணி 136 ரன்கள் எடுக்க பதட்டமான தருணங்களை அவர் அளித்தார். 


டி 20 கிரிக்கெட்டை பொறுத்த வரை 3வது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ரஷீத் கான். ஏற்கனவே இவருக்கு முன்பாக, இந்திய பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா, ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ டை, வெஸ்ட் இண்டீஸின் ஆண்ட்ரே ரசல், பாகிஸ்தானின் முகமது சமி ஆகியோருக்கு 3 முறை ஹாட்ரிக் எடுத்துள்ளனர். அவர்களின் பட்டியலில் ஐந்தாவது வீரராக ரஷீத் கானும் இணைந்துள்ளார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.