IND vs ENG 4th Test Day 3 Highlights: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் மட்டும் வென்ற நிலையில், விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற்ற அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நான்காது டெஸ்ட் போட்டி பிப். 23ஆம் தேதி அன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. ஜோ ரூட் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். தொடர்ந்து, பேட்டிங் செய்த இந்திய அணி 307 ரன்களை எடுத்தது. ஜூரேல் 90 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை வீழத்தினார். 


முன்னிலையுடன் தொடங்கிய இங்கிலாந்து


46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், முழுமையாக இரண்டு செசஷன்களை கூட அந்த அணியால் தாக்குபிடிக்க முடியவில்லை. அஸ்வின் புதிய பந்தில் பந்துவீச டக்கெட், போப், ரூட் ஆகிய மூன்று பேரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து கிராலி - பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே நல்ல பார்ட்னர்ஷிப் உருவானது. கிராலி அரைசதம் கடந்தார். 


மேலும் படிக்க | பீகார் இளைஞரின் அசாத்திய சாதனை! ஆகாஷ் தீப்: துன்பம் தந்த வெற்றி!


அஸ்வின், குல்தீப் அட்டகாசம்


அந்த நேரத்தில் குல்தீப் யாதவ் பந்துவீச வந்து, கிராலியை ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்டோக்ஸ், ஹார்ட்லி, ராபின்சன் விக்கெட்டையும் அடுத்து வீழ்த்தி குல்தீப் அசத்தினார். 9ஆவது விக்கெட்டுக்கு ஃவோக்ஸ் - பஷீர் ஜோடி சற்று நிதானமாக விளையாடியது. ஆனால், அதை அஸ்வின் ஒரே ஓவரில் பிரித்துவிட்டார். அதன்மூலம், 145 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நிலையில், இந்திய அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அஸ்வின் 5, குல்தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 


ரோஹித் - ஜெய்ஸ்வால் மிரட்டல்


இந்திய அணி ஸ்பின்னர்களை போலவே இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் ஓப்பனர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி 8 ஓவர்களிலேயே 40 ரன்களை குவித்தனர். மூன்றாவது நாள் முடிவில், ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வா்ல் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இன்னும் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது, இன்னும் 10 விக்கெட்டுகளை கையில் இருக்கிறது. 



இந்தியாவின் சாதனை தொடருமா?


குறிப்பாக, இந்திய அணியின் கேப்டனும், ஓப்பனருமான ரோஹித் சர்மா டெஸ்ட் அரங்கில் 4000 ரன்களை கடந்தார். மேலும், இந்தியாவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் அஸ்வின், அனில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். இந்த போட்டியை வெல்வதன் மூலம், இந்திய அணி இந்த தொடரையும் கைப்பற்றும் எனலாம். 


கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின், சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றதே இல்லை. 16 தொடர்களாக இந்த சாதனையை தக்கவைத்துக்கொண்டு வரும் நிலையில், இந்த தொடரையும் வென்றால் 17ஆவது தொடராக இந்த சாதனை நீளும். கடைசியாக 2013இல் அலெக்ஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியாவில் வென்றிருந்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா அப்போது 1-2 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் விதிகளில் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறதா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ