ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் விதிகளில் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறதா?

ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் விதிகள் இரண்டும் ஐசிசியால் வரையறுக்கப்பட்டுள்ளது.  இந்த இரண்டு பாலருக்குமான கிரிக்கெட் விதிகளில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 25, 2024, 10:15 AM IST
  • ஐசிசியின் கிரிக்கெட் விதிகள்.
  • பெண்கள் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள்.
  • குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஐசிசி கொண்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் விதிகளில் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறதா? title=

உலகளவில் பலராலும் விரும்பப்படும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.  குறிப்பாக இந்தியாவில் பலரும் கிரிக்கெட்டை விரும்பி பார்த்து வருகின்றனர்.  கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கான கிரிக்கெட்டிற்கும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.  பெண்களுக்கும் தனி ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது. மேலும் ஐசிசி பெண்கள் உலக கோப்பைகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டுக்கு இடையில் நிறைய விதிகளில் வித்தியாசங்கள் உள்ளது. ஒவ்வொரு வடிவத்திற்கும் ஏற்றவாறு வேறுபாடுகளை பிரதிபலிக்கும் வகையில் ஐசிசி மிக நுணுக்கமாக விதிகளை உருவாக்கி உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டில் இருக்கும் தனித்துவமான விதிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | IPL 2024: சிஎஸ்கே அணியின் மற்றொரு முக்கிய வீரரும் காயம் - ஐபிஎல் விளையாடுவது சந்தேகம்?

பந்தின் வடிவம்: ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டுக்கு இடையில் உள்ள முதன்மை வேறுபாடுகளில் ஒன்று கிரிக்கெட் பந்தின் அளவு மற்றும் எடை ஆகும். பெண்கள் கிரிக்கெட்டில் 4.94 அவுன்ஸ்/140 கிராம் முதல் 5.31 அவுன்ஸ்/151 கிராம் வரை எடையுள்ள பந்து பயன்படுத்தப்படுகிறது. சுற்றளவு 8.25 இன்/21.0 செமீ முதல் 8.88 இன்/22.5 செமீ வரை இருக்கும். ஆண்களுக்கான கிரிக்கெட் பந்தானது 5.5 மற்றும் 5.75 அவுன்ஸ் (156 மற்றும் 163 கிராம்), சுற்றளவு 8.81 முதல் 9 அங்குலம் (224 மற்றும் 229 மிமீ) வரை இருக்க வேண்டும்.

நடுவர்கள்: பெண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், அதிகபட்சம் மூன்று நடுவர்கள் இருப்பார்கள். அவர்களை அந்த போட்டியை நடத்தும் நாடு நியமிக்கலாம். ஆண்கள் டெஸ்ட் போட்டிகளில் நான்கு நடுவர்கள் இருப்பார்கள். அவர்களை ஐசிசி நேரடியாக நியமிக்கும்.

ஓவர்கள்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாளைக்கு வீசப்படும் மொத ஓவர்களின் எண்ணிக்கை ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டில் வேறுபடுகிறது. பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாளைக்கு 83 ஓவர்கள் (ஒரு மணி நேரத்திற்கு 17 ஓவர்கள்)  வீச வேண்டும். ஆண்களுக்கான டெஸ்ட் போட்டியில் மொத்தம் 90 ஓவர்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு 15 ஓவர்கள் வீச வேண்டும். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில், பெண்கள் போட்டிகளில் 150 ரன்கள் முன்னிலையுடன் ஃபாலோ-ஆனை அமல்படுத்த முடியும், அதே சமயம் ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில், ஃபாலோ-ஆனுக்கு 200 ரன்கள் முன்னிலை தேவைப்படுகிறது.

பவுண்டரி எல்லைகள்: பெண்கள் கிரிக்கெட்டில் பவுண்டரி எல்லைகள் 64 மீட்டர் மற்றும் ஆடுகளத்தின் மையத்தில் இருந்து 60 யார்டுகளுக்கு (54.86 மீட்டர்) குறைவாக இருக்கக்கூடாது. ஆண்கள் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 59.43 மீட்டர் மற்றும் அதிகபட்சம் 82.29 மீட்டர் வரை இருக்கலாம்.  மேலும் ஒரு ஃபீல்டர் எட்டு நிமிடங்களுக்கு மேல் மைதானத்தில் இல்லாமல் இருந்தால், பெண்கள் கிரிக்கெட்டில் 110 நிமிடங்கள் அபராதம் விதிக்கப்படலாம், அதேசமயம் ஆண்கள் கிரிக்கெட்டில் 120 நிமிடங்கள் அபராதம் விதிக்கப்படும்.

இடைவெளி: ஒரு நாள் போட்டிகளில், இன்னிங்ஸ் இடைவெளி பெண்கள் கிரிக்கெட்டில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை இருக்கலாம், ஆண்கள் கிரிக்கெட்டில் எந்த இடைவெளியும் 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஒரு பவர்பிளே மட்டுமே உள்ளது.  அதே போல டி20 போட்டிகளில் இன்னிங்ஸுக்கு இடையேயான இடைவெளி பெண்கள் கிரிக்கெட்டில் 15 நிமிடங்கள் இருக்கும், ஆண்களுக்கான டி20 போட்டிகளில் 20 நிமிடங்கள் இருக்கும்.

ஓவர்கள்: பெண்கள் கிரிக்கெட்டில் இருக்கும் ஓவர் விகிதங்கள் ஆண்கள் கிரிக்கெட்டில் இருந்து வேறுபடுகின்றன. டெஸ்ட் போட்டிகளில், பெண்கள் கிரிக்கெட் ஒரு மணி நேரத்திற்கு 15.79 ஓவர் வீதம் உள்ளது. ஆண்கள் கிரிக்கெட் ஒரு மணி நேரத்திற்கு 14.28 ஓவர்கள் உள்ளது. அதேபோன்று, டி20 போட்டிகளில், பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு மணி நேரத்திற்கு 16 ஓவர்கள், ஆண்கள் கிரிக்கெட்டில் ஒரு மணி நேரத்திற்கு 14.11 ஓவர்கள் என வரையறை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்திய அணியில் கலக்கும் அண்ணன்... ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்த தம்பி - யாரு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News