அரையிறுதியை நோக்கி ஆப்கானிஸ்தான்... வெளியேறுகிறதா இலங்கை அணி!
SL vs AFG Match Score Update: உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 241 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி உள்ளது.
SL vs AFG Match Score Update: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 30ஆவது லீக் போட்டி புனே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும், அந்த அணி நூர் அகமதுக்கு பதிலாக ஃபருக்கி அணியில் சேர்க்கப்பட்டார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு வழக்கம்போல் சுமாரான தொடக்கமே கிடைத்தது. திமுத் கருணாரத்னே 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பதும் நிசங்கா உடன் இணைந்து குசால் மெண்டிஸ் ஒரு ந்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருப்பினும், நிசங்கா 46 ரன்களில் ஓமர்சாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, விரைவாக ரன்களை குவித்து வந்த குசால் மெண்டில் 39 ரன்களிலும், சதீரா சமரவிக்ரம 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த டி சில்வா 14, அசலங்கா 22, சமீரா 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேத்யூஸ் உடன் தீக்ஷனா ஒரு சிறிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இருப்பினும், தீக்ஷனா 29 ரன்களில் ஃபரூக்கி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து, ஃபரூக்கியின் அடுத்த ஓவரில் மேத்யூஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும், கடைசி ஓவரில் ரஜிதா ரன் அவுட்டாக 49.3 ஓவர்களில் இலங்கை அணி 241 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான், ஓமர்சாய் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி தலா 2 போட்டிகளில் வென்று மூன்றில் தோல்வியடைந்துள்ளன. இருப்பினும், ரன்ரேட் அடிப்படையில் இலங்கை 5ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 7ஆவது இடத்திலும் உள்ளன. இதில் வெற்றி பெறும் அணிக்கே அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.
இதில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும்பட்சத்தில் அடுத்த 3 போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதிபெறலாம். இதேதான் இலங்கை அணிக்கும் பொருந்தும். இதன் நடுவே பாகிஸ்தான் அணி 6ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணியும் அரையிறுதிக்குள் நுழைய கடும் முயற்சி எடுக்கும் என்பதை எதிர்பார்க்கலாம். எனவே இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ