AFG vs IND: இந்திய அணியில் ஒரே ஒரு அதிரடி மாற்றம்... ராகுல் டிராவிட்டே சொல்லிட்டாரு...!
AFG vs IND Match: டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றம் இருக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
AFG vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 8 சுற்று நேற்று முதல் தொடங்கியது. சூப்பர் 8 சுற்றுக்கு மொத்தம் 8 அணிகள் தேர்வான நிலையில், நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 அணிகள் குரூப் சுற்றோடு வெளியேறின.
சூப்பர் 8 சுற்றில் 8 அணிகளும் தலா 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் குரூப்பில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும், இரண்டாவது குரூப்பில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா ஆகிய அணிகளும் உள்ளன. இதில் நேற்று இரவு நடந்த முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா - அமெரிக்கா அணிகள் மோதின. இதில் தென்னாப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் vs இந்தியா: இன்று மோதல்
தொடர்ந்து, இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு நடைபெற்ற போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் - இங்கிலாந்து அணிகள் மோதின, இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இப்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் (IND vs AFG) அணிகள் மோதுகின்றன.
ஆப்கானிஸ்தான் அணி குரூப் சுற்றில் நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, உகாண்டா ஆகிய அணிகளை தோற்கடித்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் பலமான அணியாக பார்க்கப்பட்டாலும் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இருப்பினும் டி20 போட்டி என்பதால் போட்டி யார் பக்கமும் எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும் என்பது மட்டும் உறுதி.
ராகுல் டிராவிட் கருத்து
இந்திய அணி குரூப் சுற்றில் மூன்று போட்டிகளை விளையாடியது, ஒரு போட்டி மட்டும் மழையால் ரத்தானது. இதில் இந்திய அணி இதுவரை ஒரே பிளேயிங் லெவனில்தான் விளையாடி வருகிறது. தொடர்ந்து இந்திய அணி மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர், 2 ஆல்ரவுண்டிங் சுழற்பந்துவீச்சாளர் ஆகிய காம்பினேஷனில்தான் விளையாடி வருகிறது. இந்நிலையில், இன்றைய போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் (Rahul Dravid) தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்காதது எவ்வளவு கடினமான முடிவு என ராகுல் டிராவிடிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,"இந்த சூழலில் யாரையும் விட்டுவிடுவது கடினமாகும். கடந்த போட்டிகளில் நாங்கள் வெளியே வைத்திருந்த நான்கு பேரும், உண்மையைச் சொல்லப்போனால் அனைவருமே தரமான வீரர்கள்தான். அந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ள சூழல் மற்றும் தேவை ஆகியவற்றுக்கு ஏற்ப இந்த காம்பினேஷன் உடன் சென்றோம். அங்குள்ள ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு பெரியளவில் சாதகமாக இல்லை, வேகப்பந்துவீச்சுக்கே சாதகமாக இருந்தது.
இந்திய அணியில் கூடுதல் ஸ்பின்னர்
"மேலும் அந்த ஆடுகளங்களில் எங்கள் பிளேயிங் லெவனில் டெப்த் இருப்பதை உறுதிசெய்ய விரும்பினோம். அதனால்தான் அந்த காம்பினேஷனில் சென்றோம் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். ஆடுகளம் இங்கே வித்தியாசமாக இருக்கலாம். இங்கு உங்களுக்கு கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் தேவைப்படலாம், பின்னர் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) அல்லது சஹால் போன்ற ஒருவர் விளையாடலாம். அவர்கள் எங்களுக்கு சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ