T20 உலகக் கோப்பை 2024-ல் மழை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த 4 போட்டிகளில் 3 போட்டிகள் மழையால் முற்றிலும் கைவிடப்பட்டன. அதே சமயம், வெஸ்ட் இண்டீசில் நடந்த சில போட்டிகளிலும் மழை குறுக்கீடுகள் இருந்தன. இந்த சூழலில் தான் குரூப் சுற்றுக்கு பிறகு டி20 உலக கோப்பை போட்டிகள் சூப்பர்-8ஐ எட்டியுள்ளது. இந்த சுற்றுக்கும் மழை எச்சரிக்கை இருக்கிறது என்பதால் வானிலை நிலவரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான போட்டிகள் கூட மழையால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வியாழக்கிழமை (ஜூன் 20) ஆப்கானிஸ்தானை எதிர்த்து சூப்பர்-8 போட்டியில் விளையாடுகிறது.
மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவ் கேப்டன்! விராட், ரோஹித் இனி இல்லை! கம்பீர் அதிரடி முடிவு!
இந்தியா ஆப்கானிஸ்தான் இதுவரை
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே இதுவரை 8 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இந்திய அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு இல்லை. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியை தோற்கடித்தது இல்லை. இந்த சூழலில் இரு அணிகளும் குரூப் 8 சுற்று போட்டியில் மோத இருக்கின்றன. ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்திய தெம்புடன் குரூப் 8 சுற்றில் களமிறங்க இருப்பதால், இந்திய அணி மிகுந்த எச்சரிக்கையுடன் அந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணியில் இருக்கும் பல பிளேயர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். எனவே, இந்தப் போட்டிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி வானிலை நிலவரம்
பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பது மகிழ்ச்சியான விஷயம். உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கும். இந்த ஆட்டத்தில் மழை பெய்ய 44 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அக்யூவெதர் தெரிவித்துள்ளது. கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், ஈரப்பதம் 75 சதவீதமாகவும் இருக்கும்.
பிட்ச் ரிப்போர்ட்
கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேரான எல்லையின் நீளம் தோராயமாக 64-65 மீட்டர்கள், இருபுறமும் எல்லைகள் 67-68 மீட்டர்கள் இருக்கும் என்பதால் இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகம்
இரண்டு அணிகளின் பிளேயிங் லெவன் :
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்/குல்தீப் யாதவ் .
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (WK), இப்ராஹிம் சத்ரான், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை: ஒரு இன்னிங்ஸில் அதிக டாட் பந்துகளை வீசிய டாப் பௌலர்கள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ