Cricket News In Tamil: கால்பந்து ரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள், டென்னிஸ் ரசிகர்கள் என விளையாட்டு விரும்பிகள் அனைவருக்குமே இப்போது கொண்டாட்டமும், துக்கமும் கலந்த காலகட்டம் எனலாம். யூரோ கோப்பை, கோப்பா அமெரிக்கா தொடர் என கால்பந்து ரசிகர்கள் முறையே ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரின் கடைசி தொடரை விளையாடுகிறார்கள் என அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல்தான், நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பையே விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்டார்க், வார்னர் உள்ளிட்ட மூத்த வீரர்களின் கடைசி தொடராக இருக்கலாம். இதன்பின்னர் இவர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்றாலும் டி20 உலகக் கோப்பையில் இனி இவர்களை காண்பது அரிதாகிவிடும். 2007ஆம் ஆண்டில் இருந்து எல்லா டி20 உலகக் கோப்பையையும் விளையாடி வந்த ரோஹித் சர்மா, ஷகிப் அல் ஹாசன் ஆகியோருக்கு இதுவே கடைசி தொடராக அமையும் எனலாம்.


இது ஒருபுறம் இருக்க, இந்திய அணி ரசிகர்களுக்கு மேலும் சில அதிர்ச்சிகர செய்திகள் காத்திருக்கலாம். இந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், புதிய தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும். அதில் கௌதம் கம்பீரின் பெயரே பெரியளவில் அடிபடுகிறது.


மேலும் படிக்க | T20 World cup : ஆஸி-ஐ பழிதீர்க்க இந்தியாவுக்கு சூப்பர் வாய்ப்பு! ரோகித் இதை மட்டும் செஞ்சா போதும்


கம்பீரின் கண்டிஷன்கள்...


கடந்த வாரம் பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு கௌதம் கம்பீரை நேர்காணல் செய்ததாகவும், அந்த நேர்காணலின் போது கௌதம் கம்பீர் பிசிசிஐயிடம் சில விஷயங்களை திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் கிரிக்கெட் விவகாரங்கள் அனைத்திலும் தான் எடுப்பதுதான் முடிவு என்றும் பிசிசிஐ அதில் தலையிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்களை தேர்வு செய்வதிலும் தனக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்திருக்கிறார். 


விராட் எதிர்காலம்...!?


மேலும், அவர் வைத்த மற்றொரு நிபந்தனைதான் இந்திய ரசிகர்களையே உலுக்கும் அளவிற்கு உள்ளது எனலாம். அதாவது அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றாவிட்டால் அணியின் நான்கு சீனியர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகிய நால்வரும் நீக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது அனைத்து ஃபார்மட்டிலும் எதிரொலிக்குமா என தெரியவில்லை. 


மேலும் ரெட் பால் மற்றும் வைட் பால் போட்டிகளுக்கு வெவ்வேறு அணியை கட்டமைக்க கம்பீர் திட்டமிட்டிருப்பதாகவும், 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான முன் தயாரிப்பையும், திட்டமிடலையும் இப்போதே வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, டி20இல் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்ற நிலையில், கௌதம் கம்பீர் வந்த பின்னர் ரோஹித், விராட் நிலைமை அணியில் எப்படி இருக்கும் என பலரும் யோசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்... மழையால் தப்பித்த தென்னாப்பிரிக்கா - அரையிறுதியில் யார் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ