வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்... மழையால் தப்பித்த தென்னாப்பிரிக்கா - அரையிறுதியில் யார் யார்?

WI vs SA Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 24, 2024, 11:29 AM IST
  • வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 135 ரன்களை அடித்தது.
  • இரண்டாவது இன்னிங்ஸில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
  • இதனால் தென்னாப்பிரிக்கா பேட்டிங்கின்போது 17 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது.
வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்... மழையால் தப்பித்த தென்னாப்பிரிக்கா - அரையிறுதியில் யார் யார்? title=

WI vs SA Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ளன. குறிப்பாக, இரண்டாவது குரூப்பின் ஆட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. அதில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. தொடரை நடத்திய மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுடன் பெரும் ஏமாற்றத்தோடு வெளியேறி உள்ளன. 

இந்திய நேரப்படி நேற்றிரவு நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுஇதிபெற்ற நிலையில், இன்று காலை நடந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை, தென்னாப்பிரிக்கா போராடி வீழ்த்தி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது. மேலும், இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க | ஆப்கானிஸ்தான் பவுலிங் மாஸ்டர் மைண்ட் இவர் தான்! ஸ்கெட்ச் போட்டு ஆஸியை வீழ்த்திய முன்னாள் சிஎஸ்கே வீரர்

தென்னாப்பிரிக்காவும் மழையும்...

ஐசிசி தொடர்களில் நாக்அவுட் சுற்றில் தென்னாப்பிரிக்கா விளையாடுகிறது என்றாலே மழை வருவது ஒரு வாடிக்கையாகவிட்டது. அந்த வகையில், இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட்டது. ஆனால் முதல் இன்னிங்ஸில் இல்லை. முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 52 ரன்களை அடித்தார். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் ஷம்ஸி அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

குறைக்கப்பட்ட இலக்கு

முதலில் 136 ரன்கள் இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. 2 ஓவர்களில் 15 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது தென்னாப்பிரிக்கா. அப்போது மழை குறுக்கிட்டது. மழையால் போட்டி தாமதமானதால் டிஎல்எஸ் விதிப்படி ஆட்டம் மொத்தம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இலக்கு 123 ரன்களாக  குறைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா ஏற்கெனவே இரண்டு ஓவர்களை சந்தித்திருந்தது. இதனால் 90 பந்துகளில் 108 ரன்கள் அப்போது தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு தேவைப்பட்டது. கையில் 8 விக்கெட்டுகளே இருந்தது. 

முடித்து வைத்த யான்சன்

இருப்பினும், மேற்கு இந்திய தீவுகளின் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா கடுமையாக திணறியது. மார்க்ரம் 18, கிளாசன் 22, மில்லர் 4 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. நீண்ட நேரம் களத்தில் போராடி வந்த ஸ்டப்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழக்க பெரும் பதற்றம் உண்டாது. கேசவ் மகராஜ் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும், மார்கோ யான்சன் பொறுமையாக நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். 5 பந்துகளை மீதம் வைத்து தென்னாப்பிரிக்கா இலக்கை அடைந்து அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றது. மேற்கு இந்திய தீவுகள் பந்துவீச்சில் ராஸ்டன் சேஸ்3, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷம்ஸி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 

அரையிறுதியில் இந்தியா...?!

இரண்டாவது பிரிவு ஆட்டம் நிறைவடைந்த நிலையில், முதல் பிரிவின் ஆட்டம் இன்றும், நாளையும் நடைபெற இருக்கிறது. இன்று இரவு நடைபெறும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் ஆஸ்திரேலியா பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி நாளை நடைபெறுகிறது. இன்று ஆஸ்திரேலியா தோற்று, நாளை ஆப்கான் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறும். மேலும் இன்றைய போட்டிகளில் எது நடந்தாலும் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு 99% உறுதியாகும்.

மேலும் படிக்க | டி20 உலகக்கோப்பை : ரன் அடிக்காததற்கு மொக்கை காரணத்தை விளக்கமாக சொன்ன ரோகித் சர்மா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News