`எப்பா... அங்குசாமி...` மும்பைக்கு உதவி செய்த ஆர்சிபி - விளக்கும் மூத்த இந்திய வீரர்!
IPL Auction 2024: கேம்ரூன் கிரீனை வாங்கியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆர்சிபி அணி உதவி செய்திருப்பதாக மூத்த இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
IPL Auction 2024: 17ஆவது ஐபிஎல் சீசன் அடுத்தாண்டு கோடைக் காலத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு நடந்தப்பட்டு வருவது போல் 10 அணிகள் இதிலும் மோதுகின்றன. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படும். இதற்கு இடைப்பட்ட ஒவ்வொரு ஆண்டும் மினி ஏலம் நடத்தப்படும். அந்த வகையில் 2022ஆம் ஆண்டு மெகா ஏலம் நடத்தப்பட்டதால் அடுத்த மெகா ஏலம் அடுத்தாண்டு 2025ஆம் ஆண்டு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் சீசனுக்கான மினி ஏலம் வரும் டிச. 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதுவரை இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெற்றதில்லை என்ற நிலையில், இதுதான் முதல்முறையாகும். இந்த ஏலத்தை முன்னிட்டு அனைத்து அணிகளும் நேற்று முன்தினம் (நவ. 26) தாங்கள் தக்கவைத்த வீரர்கள், விடுவித்த வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்பித்தது.
இதுமட்டுமின்றி பல்வேறு டிரேடிங் நடைபெற்றது. முதல் டிரேடாக லக்னோ அணியில் இருந்து ரோமாரியோ ஷெப்பேர்ட் மும்பை அணியால் வாங்கப்பட்டார். தொடர்ந்து, ராஜஸ்தானில் இருந்து தேவ்தத் படிக்கலை லக்னோ அணியும், லக்னோவின் ஆவேஷ் கானை ராஜஸ்தான் அணியும் வாங்கிக் கொண்டன. மூன்றாவது டிரேடாக, ஆர்சிபியின் ஷாபாஸ் அகமதை ஹைதராபாத் அணியும், ஹைதராபாத்தின் மயங்க் தாகரை ஆர்சிபியும் வாங்கின.
அதன்பின் நடந்த டிரேடிங்தான் மிகப்பெரும் திருப்பமாக பார்க்கப்பட்டது எனலாம். குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் தனதாக்கிக் கொண்டது. அவரும் கடந்த இரு சீசனாக குஜராத்தை வழிநடத்தி ஒரு கோப்பையையும் வென்று கொடுத்த நிலையில் தற்போது கூடுதல் குஷியுடன் மும்பை அணிக்கு திரும்பி உள்ளார் எனலாம். அவரின் வருகை மும்பை அணி வலுப்படுத்தியிருப்பது ஒருபுறம் என்றால் மும்பை அணியில் கேப்டன் பதவி யாருக்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த நிலையில், அந்த அணியின் கேம்ரூன் கிரீனை ஆர்சிபி டிரேட் மூலம் வாங்கிக்கொண்டது. அவரின் ஏலத்தொகை ரூ.17.50 கோடியாகும். ஆர்சிபி பல வீரர்களை விடுவித்திருந்ததால் அவர்களிடம் ஏலத்தில் மொத்தம் ரூ.40.75 கோடி இருந்தது. தற்போது கிரீனை வாங்கியதன் மூலம் அவர்களிடம் ரூ.23.25 கோடி உள்ளது. அதாவது, ஹசில்வுட், ஹசரங்கா, பிரேஸ்வெல், டேவிட் வில்லி, பார்னல், ஹர்ஷல் படேல், பின் ஆலன், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கௌல், கேதர் ஜாதவ் உள்ளிட்டோரை ஆர்சிபி வெளியேற்றியுள்ளது.
இந்த நிலையில், கேம்ரூன் கிரீனை வாங்கியதன் மூலம் ஆர்சிபி மும்பை அணிக்கு சாதகமாக செயல்பட்டுவிட்டது என இந்திய அணியின் மூத்த வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். "பச்சை (Green) சிவப்பு நிறமாகிவிட்டது அல்லது ஆர்சிபி பச்சை நிறமாகிவிட்டது என்று சொல்லலாம். இந்த ஒப்பந்தம் நடக்கவில்லை என்றால், ஹர்திக் ஒப்பந்தமும் நடந்திருக்காது என்பதால் மும்பைக்கு அவர்கள் பெரும் உதவி செய்திருக்கிறார்கள். திடீரென்று சூழலே மாறிவிட்டது.
கேம்ரூன் கிரீன் ஒப்பந்தத்தைச் செய்யாமல் இருந்திருந்தால், ஹர்திக்கின் ஒப்பந்தத்தை நிறுத்துவது மோசமான யோசனையாக இருந்திருக்காது. நான் இதை பெங்களூரின் கண்ணோட்டத்தில் பார்க்கிறேன், மும்பை அணி தரப்பில் இருந்து பார்க்கவில்லை. மும்பை கிரீனை விடுவித்திருப்பார்கள். கேமரூன் கிரீனை விடுவித்திருந்தால் 17.5 கோடியை விட அதிக விலை கொடுத்தா அவரை எடுக்கப்போகிறீர்கள்...?" என குறிப்பிட்டுள்ளார். அதாவது, கிரீனை ஏலத்திலேயே பெங்களூரு அணி எடுத்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ